இலவச பேருந்து நிறுத்தம்… உண்மையை உடைத்த தென்காசி கலெக்டர்… அப்செட்டில் அறிவாலயம்!

இலவச பேருந்து நிறுத்தம்… உண்மையை உடைத்த தென்காசி கலெக்டர்… அப்செட்டில் அறிவாலயம்!

Share it if you like it

மகளிர் இலவச பேருந்து திட்டத்தால் போக்குவரத்துக் கழகத்துக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் பல கிராமப்புற பேருந்துகள் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தென்காசி கலெக்டர் உண்மையை உடைத்திருக்கிறார். இதனால், அறிவாலய வட்டாரம் அப்செட்டில் இருக்கிறதாம்.

2021 சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று மகளிருக்கு இலவச பேருந்து திட்டம். அதாவது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்பதுதான். அதன்படி, தி.மு.க. ஆட்சிக்கும் வந்தது. இதன் பிறகு, மகளிர் இலவச பேருந்து பயணம் திட்டத்தில் ஸ்டாலின் கையெழுத்திட்டாலும், பொதுவான அரசுப் பேருந்து என்பது அரசு நகர பேருந்துகள் என்று திருத்தப்பட்டது. எனினும், இதாவது கிடைத்ததே என்று பெண்களும் அமைதியாக இருந்து விட்டனர். அதேசமயம், ஓசி பஸ் பயணம் என்று பெண்களை அமைச்சர்கள் கிண்டல் செய்தது தனிக்கதை.

இந்த நிலையில்தான், மகளிர் இலவச பயணத்தால் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக கிராமப்புறங்களுக்குச் செல்லும் அரசு நகரப் பேருந்துகளை அரசு நிறுத்தி இருப்பதாகவும் உண்மையை போட்டு உடைத்திருக்கிறார். அதாவது, மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதி வாடியூரில் கிராமசபை கூட்டம் நடந்தது. கலெக்டர் துரை ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது, தங்களது கிராமத்துக்கு டவுன் பஸ் வராதது குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குத்தான் கலெக்டர் துரை ரவிச்சந்திரன், மகளிர் இலவச பேருந்தால் போக்குவரத்துக் கழக்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல்வேறு கிராமப்புறங்களுக்குச் செல்லும் நகரப் பேருந்துகளை அரசு நிறுத்தி விட்டது. எனினும், உங்கள் பகுதிக்கான பேருந்து குறித்த வாய்ப்புகளை கேட்டு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். போக்குவரத்துக் கழகத்துக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தால், நகரப் பேருந்துகளை தி.மு.க. அரசு நிறுத்தி இருக்கும் விவகாரம் இதன் மூலம் அம்பலமாகி இருக்கிறது. இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it