அரபி வகுப்புகள் என்ற பெயரில் தீவிரவாதப் பயிற்சிகளா ? பகீர் கிளப்பும் அண்ணாமலை !

அரபி வகுப்புகள் என்ற பெயரில் தீவிரவாதப் பயிற்சிகளா ? பகீர் கிளப்பும் அண்ணாமலை !

Share it if you like it

தமிழகத்தில் 12 இடங்களில், NIA சோதனை நடத்தியதில், அரபிக் வகுப்புகள் என்ற பெயரில் தீவிரவாதப் பயிற்சிகள் தமிழகத்தில் அளிக்கப்பட்டு வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றசாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

கடந்த 2022 ஆம் ஆண்டு, கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நாம் யாரும் மறந்திருக்க முடியாது. தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரித்து, பலரைக் கைது செய்து, தீவிரவாதத் தாக்குதல் என்பதை உறுதி செய்த பிறகும், இன்றளவும், சிலிண்டர் வெடிப்பு என்று கூறி வரும் திமுக, தமிழகக் காவல்துறை மீதும் அழுத்தம் கொடுத்து அவ்வாறே சொல்ல வைத்திருக்கிறது. கோவையில் இது போன்ற தாக்குதல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று தேசிய உளவுத் துறை எச்சரிக்கை செய்தும், அதனைக் கண்டுகொள்ளாமல், நிர்வாகத்தில் முற்றிலுமாகத் தோல்வியடைந்திருக்கிறது திமுக அரசு. பல்வேறு வெடிபொருள்கள், ISIS தொடர்பு, 13 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் என அனைத்தும் வெளிப்பட்ட பிறகும், எதற்காக சிலிண்டர் வெடிப்பு என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக?

நேற்றைய தினம், தமிழகத்தில் 12 இடங்களில், NIA சோதனை நடத்தியதில், அரபிக் வகுப்புகள் என்ற பெயரில் தீவிரவாதப் பயிற்சிகள் தமிழகத்தில் அளிக்கப்பட்டு வருவது வெளியாகி அதிர்ச்சியளித்திருக்கிறது. சென்னை மற்றும் கோவையில் அரபிக் கல்லூரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழக உளவுத் துறை முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளதால், தமிழகத்தில் பல முறை NIA சோதனைகள் நடைபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், திமுக இது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், சமூக வலைத்தளங்களில் செயல்படும் பாஜகவினரைக் குறிவைத்து நடவடிக்கை எடுக்கிறது.

மத்தியில் கடந்த 2004 – 2014 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, நாடு முழுவதும் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்து வந்ததை நாம் அறிவோம். நூற்றுக்கணக்கான பொதுமக்கள், நாடு முழுவதும் தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பலியாகினர். கடந்த 2014 ஆம் ஆண்டு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவினுள் எங்கும் தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழாமல் நாடு பாதுகாப்பாக இருக்கிறது. எல்லையில் நடைபெறும் கோழைத்தனமான தீவிரவாதத் தாக்குதல்களுக்கு, அவர்கள் இடத்திற்குச் சென்றே பதிலடி கொடுத்து, அவர்கள் இருப்பையே அழிக்கும் ஆண்மையுள்ள ஆட்சி மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தீவிரவாதம் என்பது அனைவருக்கும் எதிரி என்பதை இஸ்லாமியச் சகோதர சகோதரிகள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். பாஜக ஆட்சியில்தான் நாடு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை அறிந்திருக்கிறார்கள்.

திமுகவைப் போலவே, பங்காளிக் கட்சியும், தீவிரவாத இயக்கமான PFI இயக்கத்துடன் தொடர்புடைய SDPI உடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். PFI தீவிரவாத இயக்கம் இதுவரை தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் பல பாஜக, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களைப் படுகொலை செய்ததோடு வெடிகுண்டுகள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசித் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இவர்கள் அனைவரின் நோக்கம், பொதுமக்கள் பாதுகாப்பை அடகு வைத்தாவது அதிகாரத்தை அடைய வேண்டும் என்பது மட்டும்தானே தவிர, மக்கள் நலன் அல்ல. இதைக் கருத்தில் கொண்டு வருகிற பாராளுமன்ற தேர்தலில் நமது மக்கள் வாக்களிக்க வேண்டும்.


Share it if you like it