பூர்விக கிராமத்தில் உள்ள இஷ்ட தெய்வங்களை வழிபட்ட தல தோனி !

பூர்விக கிராமத்தில் உள்ள இஷ்ட தெய்வங்களை வழிபட்ட தல தோனி !

Share it if you like it

புதன்கிழமை அன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மாவட்டத்தின் கீழ் உள்ள ஜைதி தெஹ்சில் ல்வாலி என்கிற தனது சொந்த பூர்விக கிராமத்தை அடைந்தார். தோனியை பார்த்த மக்கள் மகிழ்ச்சியில் குதித்தனர். தனது மனைவி சாக்ஷியுடன் கிராமக் கோயில்களில் தெய்வங்களை வழிபட்டு, ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். மேலும், பெரியவர்களிடம் ஆசி பெற்று, கிராமத்தில் சுமார் இரண்டரை மணி நேரம் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கிரிக்கெட் டிப்ஸ் வழங்கினார். அங்குள்ள கங்கநாத் கோயில், கோலு தேவ்தா, தேவி மாதா மற்றும் நரசிம்ம கோயில் ஆகியவற்றில் அவர் பிரார்த்தனை செய்தார்.

தோனியின் கிராமமான ல்வாலி இன்னும் சாலைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகிறது. தோனி அங்கு காரில் வந்த பிறகு, நடைபாதை வழியாக வீட்டை அடைந்தார். மஹியும் சாக்ஷியும் கிராமத்தில் தங்களுக்கு கிடைத்த மரியாதை மற்றும் அன்பால் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டனர். ஆனால் சாலை இல்லாததால் தோனி தனது மகளை கிராமத்திற்கு அழைத்து வரவில்லை. இரண்டு மூன்று வருடங்கள் கழித்து தன் மகள் வளர்ந்து பெரியவளாகிய பிறகு அவளுடன் மீண்டும் கிராமத்திற்கு வர விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


Share it if you like it