தமிழகத்தில் கடந்த பல வருடங்களாக பாஜக அதிமுக இடையே கூட்டணி அரசியல் இருந்து வந்தது. இதில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் தொடங்கியது . அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோது சமூகமாக இருந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி இடையே தொகுதி பங்கீடு தொடங்கி தேர்தல் களப்பணிகள் வரை பெரும் குழப்பங்கள் குளறுபடிகள் நேரிட்டது. அப்போதே அதிமுக பாஜக கூட்டணி வேண்டாம் என்று இரு தரப்பிலிருந்து குரல்கள் எழுந்தது . ஆனாலும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் திமுக என்னும் பொது எதிரியை சமாளிக்க பாஜக அதிமுக இருவருக்கும் ஒரு தோழமை தேவைப்பட்டது. அந்த வகையில் இருவரும் இணைந்து செயல்பட பாஜக தயாரானது. ஆனால் அதிமுக கணக்கு வேறாக இருந்தது.
அதிமுக தரப்பில் உள்கட்சி பூசல் இரட்டை தலைமை இரட்டை இலை சின்னத்துக்கான நீதிமன்ற வழக்குகள் அதிமுக மூன்றாக உடைந்த சிக்கல் என்ற பல்வேறு உட்கட்சி குழப்பங்கள் மேலிட்டதால் அதிமுகவில் ஒரு இருக்கமான ஒருங்கிணைப்பும் தெளிவான தீர்க்கமான முடிவெடுக்கும் சூழலும் இல்லாமல் இருந்தது. இரண்டாம் கட்ட தலைவர்களாக இருந்த பலரும் அவரவரின் அரசியல் ஆதாயத்திற்காக தனிப்பட்ட லாபங்களுக்காக பல வழிகளிலும் லாபி செய்ய தொடங்கினார்கள். அதை திமுக தனக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கியதும் அதிமுக பாஜக கூட்டணியில் திரும்பிய பக்கம் எல்லாம் சிக்கல் எழுந்தது.
சட்டமன்றத் தேர்தலில் தோல்விக்கு பிறகு அதிமுக பாஜக கூட்டணியில் இருந்ததால்தான் தோல்வியடைந்தது. சிறுபான்மை வாக்குகளை இழந்ததால் தான் தோற்றோம் என்று அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரும் வெளிப்படையாக குற்றம் சாட்டி அதிமுக பாஜக தலைமையும் முடிவுக்கு கொண்டு வர விரும்பினார்கள்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வாக்குகள் எல்லாம் அதிமுகவிற்கு நகர்ந்தது. ஆனால் அதிமுக தரப்பிலிருந்து பாஜகவிற்கு ஒரு வாக்கும் நகரவில்லை. அத்தனையும் திமுகவிற்கே நகர்ந்தது. அந்த காரணத்தால் தான் திமுக வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தது .மேலும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை தன்வசம் திருப்ப பாஜக எடுத்த முயற்சிகளில் நூறில் ஒரு சதவீதத்தை கூட அதிமுக எடுக்கவில்லை. காரணம் அவர்களுக்கு தான் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இரண்டாம் பட்சமாக இருந்தது . தங்களோடு கூட்டணியில் இருக்கும் பாஜக எந்த வகையிலும் வெற்றி பெற்று விடக்கூடாது. அவர்கள் சட்டசபையில் கால் பதிக்க கூடாது .அடுத்த ஒரு மூன்றாவது நான்காவது என்ற வகையில் மாநில கட்சியாக வளர்ந்து விடக்கூடாது என்பதை மட்டுமே அதிமுகவின் தலைமையும் தொண்டர்களும் குறியாக இருந்தார்கள்.
அந்த அடிப்படையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவது என்பது இரண்டாம் பட்சம் எந்த இடத்திலும் கூட்டணியில் இருக்கும் பாஜக வெற்றி பெற்று விடக்கூடாது என்பதே முழுமையான இலக்காக இருந்தது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு திமுக பம்பரமாக சுழன்று வேலை பார்த்தது. பணம் பாய்ந்தது. முழுமூச்சாக அவர்களின் போராட்ட அரசியலும் இலவசம் வாக்கு வங்கி அரசியல் என்று அனைத்தும் கைகொடுக்க சொற்ப அளவிலான வித்தியாசத்தில் திமுக ஆட்சியைப் பிடித்து விட்டது . திமுக ஆட்சிக்கு வந்ததே தனது கட்சியை வளர்க்க நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்ற வகையில் பாஜகவிற்கு திருப்தி. உண்மையில் திமுக ஆட்சிக்கு வந்ததில் பாஜகவை விடவும் அதிமுகவுக்கு தான் பெரும் மகிழ்ச்சி. காரணம் பாஜகவை முடக்குவதற்கு பாஜகவின் தொண்டர்களை முடக்குவதற்கு ஆளும் கட்சியாக இருக்கும் திமுக அத்தனை அராஜகத்தையும் கையில் எடுக்கும். நாம் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தால் மட்டும் போதும். பாஜகவை திமுக ஒழித்து கட்டிவிடும். அதன் பிறகு வழக்கம் போல் தமிழகத்தில் திமுக அதிமுக என்ற இரண்டு கட்சிகள் மட்டுமே கோலோச்சும். அந்த வகையில் இன்று திமுக செய்வது எல்லாமே நாளை நமக்கு நல்ல பலனை கொடுக்கும் என்று அதிமுக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது.
பாஜக எதிர்ப்பு என்ற பெயரில் இந்த துவேசம் சிறுபான்மை ஆதரவு என்ற பெயரில் பாஜகவின் மீது அவதூறு மோடி எதிர்ப்பு என்ற பெயரில் தேசிய இறையாண்மை கூட அவமதிப்பது என்று திமுகவின் எல்லை மீறிய செயல்கள் அனைத்தும் அதிமுகவில் கள்ள மவுனத்தால் முழுமையாக ஆதரிக்கப்பட்டது. மறுபக்கம் பாஜக அல்லது இந்து அமைப்புகள் சார்ந்தவர்கள் சாதாரண சமூக ஊடக பதிவுகள் போடுவதற்கு கூட அவர்களின் மீது குண்டர் சட்டம் வரை பாய்ந்தது .வழக்குகள் சிறை நீதிமன்றம் என்று அலைக்கழிப்புகளுக்கு ஆளாக்கினார்கள். ஆனால் பொய் வழக்கு போடுவதையே பொழப்பாக்கி வைத்திருந்த திமுகவை எதிர்த்து அதிமுக ஒரு வார்த்தை ஜனநாயகம் கருத்து சுதந்திரம் என்று கருத்து பேசவில்லை. கோவை சம்பவத்திற்கு பிறகு ஓர் ஆண்டுகள் முடிந்த பிறகு கூட அதே கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களாயிர் இருந்தபோதிலும் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் யாரும் இன்றுவரை அவ் விஷயத்தில் திமுகவின் அலட்சியத்தையோ அராஜகத்தையும் வெளிப்படையாக கண்டிக்கவும் எதிர்க்கவோ இல்லை. காரணம் அவர்களின் வாக்கு வாங்கி அரசியல்.
அதிமுக பாஜக கூட்டணி என்ற பெயரில் பாஜகவின் உழைப்பு தேசிய பாஜகவின் தலைமை ஆதரவு என்று அனைத்தையும் அதிமுக அறுவடை செய்யும். பாஜக உள்ளிட்ட இதர கூட்டணிகளின் வாக்குகளை கவர்ந்து கொள்ளும். ஆனால் அதிமுகவின் வாக்குகள் மொத்தமாக திமுக கூட்டணிக்கு சாதகமாக போகும். பாஜகவிற்கு வராது .அரசியல் களத்திலும் திமுகவின் அத்தனை அராஜகத்திற்கும் அதிமுக மறைமுகமாக துணை நிற்கும் .ஆனால் பாஜகவின் எந்த ஒரு பாதிப்பிற்கும் மனிதாபிமான குரல் கூட கொடுக்காது. இனியும் அதிமுக பாஜக கூட்டணி நீடிக்கும் பட்சத்தில் தங்களின் களப்பணி உழைப்பு அர்ப்பணிப்பு அனைத்தும் வீண் தான் என்ற விரக்தியின் விளிம்பில் பாஜகவின் தொண்டர்கள் நின்றார்கள். தங்களுக்கு பாதுகாப்பு கட்சியின் வளர்ச்சி கடைக்கோடி தொண்டனையும் அரவணைக்கும் மன்னனையும் இருந்த தங்களின் நம்பிக்கைக்குரிய தமிழக பாஜக தலைவருக்கு தங்களின் எதிர்பார்ப்புகளையும் கடந்த கால துரோகங்களையும் அவர்கள் வெளிப்படையாக கொண்டு போய் சேர்த்தார்கள்.
பல ஆண்டுகளாக தமிழகத்தில் நடப்பதை பார்த்தவர் பாஜக கட்சிக்குள் வந்த பிறகு மூன்று ஆண்டுகளாக திமுக அதிமுகவின் அரசியலை கண்முன்னே பார்த்தவர். கடை கோடி தொண்டரின் மனநிலையை எளிதாக தமிழக பாஜக தலைவரால் உணர முடிந்தது. தொண்டர்களுக்கும் விருப்பமில்லை. கட்சிக்கும் அதிமுக கூட்டணியால் எந்த பலனும் இல்லை. குறைந்தபட்சம் கூட்டணி தர்மம் என்ற மரியாதை கூட அதிமுகவிலிருந்து பாஜகவிற்கு இல்லை. என்னும் போது இப்படிப்பட்ட ஒரு கூட்டணி இனியும் தேவையா? என்ற கேள்வி அவருளும் எழுந்ததன் பலன் தான் திராவிட கட்சிகளோடு கூட்டணி என்றால் நான் தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை. திராவிட கட்சிகளோடு கூட்டணியை நான் தலைவராக இருந்து பேசி முடிக்கவும் அவர்களோடு இணைந்து களப்பணி செய்யவோ என்னால் முடியாது என்று அவர் வெளிப்படையாக அறிவித்தது.
அதன் பிறகு தெளிவாக தமிழக பாஜக தலைவர் பயணிக்க தொடங்கினார். தொண்டர்கள் அவர் பின்னே அணிவகுத்தக்கு தொடங்கினார்கள். தேசிய பாஜகவின் முழு ஆதரவு ஒத்துழைப்பு தமிழக பாஜக தலைமைக்கு இன்னும் கூடுதலாக கிடைக்க தொடங்கியது . அதன் விளைவு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அதிமுக இரண்டு கட்சிகளை தவிர்த்து தான் பாஜகவின் கூட்டணி அமையும். பாஜகவின் தலைமையில் தான் தமிழகத்தில் கூட்டணி அமையும் என்ற தெளிவான நிலைப்பாடு கண்முன்னே தெரிய தொடங்கியது. நாம் என்ன செய்தாலும் நம்மை விட்டு பாஜக போகாது .அப்படியே போனாலும் எதிர்முகாமில் இருக்கும் திமுக விடவும் தான் போகும் . பார்த்துக் கொள்ளலாம் என்ற இருமாப்பில் இருந்த அதிமுகவிற்கு இது அதிர்ச்சியாக இருந்தது. மறுபக்கம் திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுகவின் ஊழல்களை அம்பலப்படுத்தி வருமான வரித்துறை அமலாக்கத்துறை பிடியில் திமுகவினர் வந்ததில் திமுகவும் ஆடி போனது. ஒரு பக்கம் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் . மறுபக்கம் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற தலைவலி இருந்த திமுகவிற்கு பாஜக விடம் மோதி ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை தகர்ந்து தங்களை காத்துக் கொண்டால் போதும் என்று களத்தில் இருந்து ஒதுங்க தொடங்கியது.
அதுவரையில் மறைமுகமாக பாஜகவை விமர்சனம் செய்வது .திமுக விற்கு ஆதரவாக உள்ளடி வேலை செய்வது என்று இருந்த அதிமுக வேறு வழியில்லாமல் நேரடியாக தமிழக பாஜக தலைவரையும் பாஜகவின் செயல்பாடுகளையும் விமர்சிக்க தொடங்கியது. பொது சிவில் சட்டம் உள்ளிட்ட விஷயங்களை கூட்டணி தர்மத்தையும் மீறி எதிர்ப்பு என்ற தீர்மானத்தை முன்மொழிந்தது. பல்வேறு முருகல்களையும் கடந்து பொறுமை காத்து மரியாதையுடன் நடந்து கொண்ட அண்ணாமலையின் பொறுமையை பெருந்தன்மையை அலட்சியப்படுத்தி அதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. நடப்பதை எல்லாம் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த தமிழக பாஜக தலைவர் தேசிய பாஜக தலைமையிற்கு அனைத்தையும் கவனத்திற்கு கொண்டு போய் விட்டு பொறுமை காத்தார்.
அதிமுகவின் ஒரு மாபெரும் ஆளுமையாக அதன் தலைவர்கள் கொண்டாடிய திமுகவின் தலைவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் இடையே நடந்த ஒரு வரலாற்று நிகழ்வை பொதுவெளியில் தமிழக பாஜக தலைவர் குறிப்பிட்டு பேசினார். உதயநிதியின் சனாதன ஒழிப்பு மாநாடு அது சம்பந்தமான சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் போது தமிழகம் என்றைக்கும் ஆன்மீக பூமி. தமிழகத்தில் தேசியம் தெய்வீகம் செழித்தோங்கிய இடம். இங்கு சனாதன தர்மத்திற்கு எதிரானவர்களை எப்போதும் மக்கள் பெரிய அளவில் கொண்டாடியது இல்லை என்ற வகையில் கடந்த கால வரலாறுகளை வெளிப்படுத்தும் விதமாகத்தான் அவர் பேசினார். ஆனால் அவர் பேசிய உண்மை சம்பவத்தை தங்களை எதிர்த்து அரசியல் செய்வதாக வேண்டுமென்று அதிமுக வன்மத்தோடு அணுகி தேவையில்லாமல் தமிழக பாஜக தலைவரையும் அவரின் அரசியல் செயல்பாடுகளையும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்ய தொடங்கியது .
தமிழக பாஜக தலைவர் பேசியது அத்தனையும் உண்மை வரலாற்று பூர்வமாக ஆவணங்களாக இருப்பது அதிமுகவின் ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனால் அவர்களுக்கு பிரச்சனை அண்ணாதுரையோ அல்லது தமிழக பாஜக தலைவரின் பேச்சோ அல்ல. தமிழக பாஜக தலைவர் திமுகவிற்கு எதிராக எடுக்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் . தேசிய பாஜக தலைமை தமிழகத்தில் ஊழல் விவகாரங்கள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்களின் வாக்கு வங்கி அரசியலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக அவர்கள் உணர்ந்தார்கள். நேரடியாக மோடி அமித்ஷாவை எதிர்த்து தேசிய பாஜகவை எதிர்த்து அரசியல் செய்யும் துணிவு அவர்களுக்கு இல்லாததால் அது அத்தனையையும் வன்மமாக தமிழக பாஜக தலைவரின் மேல் இறக்கி வைத்தார்கள். அதன் வெளிப்பாடு அதிமுகவினரின் பேச்சும் செயல்பாடுகளும் திமுகவிற்கு சற்றும் குறையாத பாஜக எதிர்ப்பு அவமதிப்பு என்ற வகையில் கூட்டணி பெயரில் தொடர்ந்தது.
இத்தனை காலமும் நேரடியாக தேசிய பாஜகவை எதிர்க்க துணிவும் இல்லாமல் அதே நேரத்தில் தமிழக பாஜக கட்சியை அரவணைத்துப் போக விருப்பமும் இல்லாமல் வேண்டாத மருமகள் கைபட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் என்ற நிலையில் தமிழக பாஜகோடு கூட்டணியை தொடர்ந்த அதிமுக வெளிப்படையாக கூட்டணி முடிவுக்கு வந்ததாக அறிவித்தது. அதை அதிகாரப்பூர்வமாக மாவட்ட செயலாளர் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் மூலம் பொது வழியில் அறிவிப்பும் செய்து விட்டது. இதற்காகவே காத்திருந்த தமிழக பாஜக தலைவரும் அதிமுக பாஜக கூட்டணி முடிவு பற்றி உரிய நேரத்தில் தேசிய பாஜக அறிவிக்கும் என்று அமைதியாக அவரது யாத்திரையை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இனி இத்தனை காலமும் காத்திருந்த காலம் கனிந்து வந்த புன்முறுவலோடு தேசிய பாஜக தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி முடிவுக்கு வந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் . அந்த அறிவிப்பு வந்த பிறகு இதுவரை இனிப்பு வழங்கி மகிழும் பாஜகவினர் வாண வேடிக்கை நடத்தினாலும் ஆச்சரியம் இல்லை. இனி தமிழகத்தில் பாஜகவின் தலைமையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்யும். ஏற்கனவே இருக்கும் கட்சிகள் வர இருக்கும் உதிரி கட்சிகள் என்று அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு வலுவான கூட்டணியாக பாஜகவின் தலைமையில் அண்ணாமலையின் தலைமையில் தமிழகத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும்.