தி.மு.க அரசிற்கு எதிராக மாநிலம் முழுவதும் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்த பா.ம.க முடிவு..! 

தி.மு.க அரசிற்கு எதிராக மாநிலம் முழுவதும் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்த பா.ம.க முடிவு..! 

Share it if you like it

கொரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளும் உடனடியாக மூடப்பட வேண்டும். மது அரக்கனின் தீமைகளைத் தடுக்க முழு மதுவிலக்கு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்!

மதுவிலக்கு கோரிக்கைகள் எழுப்பப்படும் போதெல்லாம் மதுக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற காரணம் கடந்த 38 ஆண்டுகளாக மதுவிற்பனைக்கான பாதுகாப்பு கவசமாக பயன்படுத்தப்படுகிறது. கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

தமிழ்நாடு போலி மது, கள்ள மதுவால் பாதிக்கப்படக் கூடாது என்பதால் தான் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்தததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கம் என்று மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து இன்று  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல்  லட்சக்கணக்கான மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது, மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பது மன்னிக்க முடியாதது. மதுக்கடைகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை எனவும்.  மதுக்கடைகளை திறக்க ஒரு நியாயமான சமூகத் காரணம் கூட கிடையாது என்றும்.

ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி முழு மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டியும்   நாளை மறு நாள் பா.ம.க சார்பில் கருப்புக் கொடி ஏந்தி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it