தேசிய முன்னணி அமைப்புக்கு தடை விதித்த மத்திய அரசு !

தேசிய முன்னணி அமைப்புக்கு தடை விதித்த மத்திய அரசு !

Share it if you like it

இந்தியாவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரையும், தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமைப்புகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்து வருகிறது. அந்த வகையில், நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதற்காக, ஜம்மு-காஷ்மீர் தேசிய முன்னணி அமைப்பை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பதிவில், ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணியை சட்டவிரோத அமைப்பாக அரசு அறிவித்துள்ளது. இந்த அமைப்பு ஜம்மு-காஷ்மீரை பாரதத்தில் இருந்து பிரிப்பதையும், தீவிரவாதத்தை ஆதரிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

மேலும், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு சவால் விடும் வகையில், பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பாரத மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, தீவிரவாத சக்திகளை களையெடுக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில், இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்திலும், தேச விரோத நடவடிக்கைகளிலும் ஜேகேஎன்எஃப் ஈடுபட்டு வந்தது. தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து வந்த அந்த அமைப்பு, ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்து வந்தது. இதுமட்டுமின்றி, ஜம்மு-காஷ்மீரில் தேர்தலை புறக்கணிக்குமாறு மக்களிடம் அந்த அமைப்பு வலியுறுத்தி வந்தது.

இவ்வாறு தேசத்திற்கு எதிராக பல்வேறு சட்டவிரோத செயல்களில் அந்த அமைப்பு ஈடுபட்டு வந்தது. எனவே அந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

https://x.com/AmitShah/status/1767579809746448594?s=20


Share it if you like it