மக்களை வாட்டி வதைக்கிறது திராவிட மாடல் தமிழக அரசு – விளாசிய நாராயணன் திருப்பதி !

மக்களை வாட்டி வதைக்கிறது திராவிட மாடல் தமிழக அரசு – விளாசிய நாராயணன் திருப்பதி !

Share it if you like it

மாணவ மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல, உரிய நேரத்தில் பேருந்துகளை இயக்காமல் மக்களை வாட்டி வதைக்கிறது திராவிட மாடல் தமிழக அரசு என்று பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி திமுக அரசின் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

கடந்த வாரம் திருநெல்வேலி மற்றும் தென்காசி பாராளுமன்ற தொகுதிகளில் கிராமப்புறங்களில் சுற்றுப்பயணம் செய்த போது, பொது மக்களில் பலர், குறிப்பாக பெண்கள் தங்கள் பகுதிக்கு/ஊருக்கு பேருந்துகள் இல்லை அல்லது குறைவாக உள்ளன என்று குறிப்பிட்டது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து அளிப்பதாக சொல்லிக்கொண்டு, ‘ஓசி ஓசி, ஓசி பஸ்ல போறீங்க’ என்று கிண்டல் செய்யும் தி மு க அமைச்சர்கள் ஒரு புறம், மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல, உரிய நேரத்தில் பேருந்துகளை இயக்காமல் கொடுமையிழைக்கும் திமுக அரசு ஒரு புறம் என மக்களை வாட்டி வதைக்கிறது திராவிட மாடல் தமிழக அரசு.

டில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை கைது செய்தது சரியானதே! என்று டில்லி உயர்நீதி மன்றம் இன்று குறிப்பிட்டு, அரவிந்த கேஜ்ரிவாலின் பிணையை மறுத்துள்ளது. மேலும், மதுக் கொள்கையில் மற்ற ஆம் ஆத்மீ கட்சியினருடன் அவர் சதி திட்டத்தில் ஈடுபட்டார் என்பது அமலாக்க துறையின் வாதங்களின் அடிப்படையில் உறுதியாகியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. பொது மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தனித் தனி சட்டங்கள் இல்லை என்றும், கைதுக்கு தேர்தல் நேரத்தை தொடர்பு படுத்துவது தவறு என்றும் டில்லி உயர்நீதி மன்றம் குறிப்பிட்டுள்ளது.

(குறிப்பு : இந்த புகாரை முதலில் காங்கிரஸ் கட்சி தான் அளித்தது என்பதோடு, இப்போது இந்த கைதை கண்டிப்பதும் அதே காங்கிரஸ் கட்சி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.)


Share it if you like it