கோவை வாசி ஒருவர் கோயமுத்தூரில் சாலைகள் மிக மோசமாக உள்ளதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு உடன் ஒரு காணொளியையும் இணைத்து பதிவிட்டிருந்தார். அதில், கோயம்புத்தூர் நகருக்குள் ஒரே ஒரு 6 வழிச் சாலை மட்டுமே உள்ளது, அதுவும் இப்போது பரிதாபமாகத் தெரிகிறது. (அவிநாசி சாலை)
பல இடங்களில் ஒரு வழிப்பாதை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கோவை மாநகராட்சியில் இந்த எளிய பிரச்சனையை உங்களால் தீர்க்க முடியவில்லையா?
இதுதொடர்பாக பாஜக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மிகவும் மோசமான நிலையில் கோவையின் முக்கிய பகுதியை இணைக்கும் சாலைகளள் உள்ளன. இதுகுறித்து பலமுறை சட்டப்பேரவையில் நான் கேள்வி எழுப்பியபோதெல்லாம் முதலமைச்சர், ரூபாய்.200 கோடி வரை கோவையின் சாலைகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்திருக்கிறார்.
இன்று வரை சாலை பணிகளை அரசு மேற்கொள்ளவில்லை. மழைக்காலம் என்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மக்கள் மீது சிறிதேனும் அக்கறை எடுத்து அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படுவதற்கு முன்பே சாலைப்பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழக அரசிற்கு கோரிக்கைவைக்கிறேன். இவ்வாறு சமூக வலைத்தளத்தில் வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.
https://x.com/jaak_ash/status/1728962876919173374?s=20