வடலூர் வள்ளலார் பெருவெளி இடத்தை புராதான சின்னம் உள்ள இடமாக அரசு அறிவிப்பதோடு, வடலூர் முழுவதையும் பாதுகாக்கப்பட்ட இடமாக அரசு அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்து முன்னணி அமைப்பானது கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில்,
தமிழக அரசே..! இந்து அறநிலை துறையே…!!
வடலூர் வள்ளலார் பெரு வெளி இடத்தில் கட்டிடம் கட்டுவதை கைவிட வேண்டும்..
கடந்த சில காலமாக வடலூர் வள்ளலார் பெருவெளி இடத்தில் இந்து அறநிலையத்துறை கட்டிடம் கட்டுவதை கைவிடக் கோரி இந்து முன்னணி மற்றும் பொதுமக்களிடமிருந்து பல கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வந்துள்ளது.
தற்பொழுது தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி மூலம் பல ஆயிரம் ஆண்டு கால கட்டிட மதில் சுவர்கள் இருப்பதாக தகவல் வந்துள்ளது.
வள்ளலார் பெருவழி இடத்தில் இந்து அறநிலையத்துறை கட்டிடம் கட்டும் முடிவை கைவிட்டு விட்டு அகழ்வாராய்ச்சி செய்ய தொல்லியல் துறையிடம் அரசு முழுமையாக ஒப்படைக்கப் பட வேண்டும்.
வடலூர் வள்ளலார் பெருவெளி இடத்தை புராதான சின்னம் உள்ள இடமாக அரசு அறிவிப்பதோடு, வடலூர் முழுவதையும் பாதுகாக்கப்பட்ட இடமாக அரசு அறிவிக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.