தமிழர்கள் ஸ்ரீராமரை காண சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த இந்து முன்னணி !

தமிழர்கள் ஸ்ரீராமரை காண சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த இந்து முன்னணி !

Share it if you like it

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த மாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. அயோத்தியில் சரயு நதிக்கரையில் பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் ராமர் குழந்தை வடிவில் காட்சி அளிக்கிறார். கடந்த மாதம் 22 ஆம் தேதி பிரதமர் மோடி ராமர் சிலையை பிரான பிரதிஷ்டை செய்து வைத்தார். ராமர் கோயில் திறக்கப்பட்ட அடுத்த நாள் முதலே பக்தர்கள் அயோத்தியில் குவிந்து வருகின்றனர்.

அயோத்தி நகரில் பக்தர்களின் வசதிக்காக தங்கும் இடம், உணவகங்கள் என பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மத்திய அரசு, அயோத்திக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.

மிழகத்திலிருந்து, அயோத்தி ஶ்ரீ ராமர் கோவில் செல்லும் பக்தர்களுக்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திலிருந்து 34 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இந்த ரயில்கள், கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் இருந்து அயோத்திக்குச் செல்லவிருக்கின்றன. தமிழகத்தில் இருந்து அயோத்தி ஶ்ரீராமர் கோவிலில் தரிசனம் செய்ய ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு மானிய விலையில் ரயில் பயணக் கட்டணம், இலவச உணவு, இலவச தங்குமிடம், இலவச உள்ளூர் பயண சேவை மற்றும் சிறப்பு தரிசன வசதிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழர்கள் ஸ்ரீ ராமரை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்த
மத்திய அரசுக்கு இந்து முன்னணி அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இந்து முன்னணி X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

தமிழும் ஸ்ரீராமனும்
தமிழர்கள் ஸ்ரீராமனைக் காண சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்த மத்திய அரசுக்கு நன்றி. அயோத்தி ஸ்ரீராமனுக்கும் தமிழகத்திற்கும் தொடர்பினை உலகறியச் செய்திட மத்திய அரசு அயோத்தி தமிழ்ச்சங்கமம் நடத்திடவும் இந்து முன்னணி கோரிக்கை விடுக்கிறது..

அயோத்தி ஸ்ரீ ராமரை தரிசனம் செய்ய பக்தர்கள் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ரயில்கள் இயக்கப்படும் நிலைமையில் அயோத்தி ஸ்ரீராமஜென்மபூமி கரசேவைக்கு முன்மாதிரியாக திகழ்ந்த தமிழகத்தின் ஜலகண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ள வேலூரில் இருந்ததும் அயோத்திக்கு சிறப்பு ரயில் சேவை தொடங்கிய மத்திய அரசுக்கு இந்துமுன்னணி சார்பில் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.


Share it if you like it