“தி இன்டாமிடபுள்ஸ்” புத்தக வெளியீட்டு விழா!

“தி இன்டாமிடபுள்ஸ்” புத்தக வெளியீட்டு விழா!

Share it if you like it

சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய தொகுப்புகள் அடங்கிய “தி இன்டாமிடபுள்ஸ்” (THE INDOMITABLES) என்கிற புத்தக வெளியீட்டு விழா, சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையிலுள்ள நாரதகான சபாவில் நேற்று (11.5.2023) நடந்தது.

தென்னிந்திய ஆய்வு மையம் (CSIS) ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்ச்சியில், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே.கணேசன், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், இப்புத்தகம் எதிர்கால இளைய தலைமுறையினரை அவசியம் சென்று சேர வேண்டும். ஆகவே, இப்புத்தகம் தனது நிறுவனத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சென்று சேரும் வகையில், தனது கல்லூரி நூலகத்தில் வைப்பதாக வாக்குறுதி அளித்தார்.

புத்தகத்தின் ஆசிரியர் சுதாகர் நாராயணன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு ஏற்புரை வழங்கினார். தென்னிந்திய ஆய்வு மையத்தின் இயக்குனர் சந்தீப் குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், அலயென்ஸ் பப்ளிகேஷன் வெளியீட்டாளர் மற்றும் விற்பனையாளர் சீனிவாசன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி பேசுகையில், இப்புத்தகத்தை தமிழாக்கம் செய்து தமிழில் வெளியிடப்போவதாக உறுதியளித்தார். விவேகானந்தா எஜுகேஷனல் சொசைட்டியின் செயலாளர் வெங்கடேசன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். தென்னிந்திய ஆய்வு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் குமரேசன் நன்றியுரை வழங்கினார்.

முன்னதாக, கல்லூரி மாணவி அத்யாஷா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கல்லூரி மாணவர் தரணி அறிமுகவுரை நிகழ்த்தினார். இசைக்கல்லூரி மாணவி துர்காதேவி, பள்ளி மாணவிகள் சிந்து பாரதி, சுபலட்சுமி ஆகியோர், தமிழ்த்தாய் வாழ்த்து, தேசபக்திப் பாடல்கள் மற்றும் தேசியகீதம் ஆகியவற்றை பாடினார்கள்.

மேலும், நிகழ்ச்சியில் சுப்பிரமணிய சிவா, மகாகவி பாரதியார், ஜெய்ஹிந்த் செண்பகராமன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் விழாவில் கவுரவிக்கப்பட்டனர். இப்புத்தகத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த, சுதந்திர போராட்ட வீரர்கள் 125 பேரை பற்றிய தொகுப்புகள் அடங்கி இருக்கின்றன. மேலும், பூலித்தேவன் முதல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்கள் வரையிலான 300 ஆண்டு வரலாறு இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.

இப்புத்தகம் வேண்டுவோர் ஆன்லைனில் அமேசானில் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்…

விழாவின் மொத்த வீடியோவையும் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…


Share it if you like it