‘தி கேரள ஸ்டோரி’ திரைப்பட்டத்தை டெல்லி ஜே.என்.யூ.வில் அப்படகுழுவினர் திரையிட்டு காண்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பாவி ஹிந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மூளைசலவை செய்து மதமாற்றம் செய்கின்றனர். இதையடுத்து, அப்பெண்களை தவறான பாதைக்கு திருப்பி விடுகின்றனர் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான் ’தி கேரள ஸ்டோரி’. இப்படம், நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இப்படிப்பட்ட சூழலில், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் ’தி கேரள ஸ்டோரி’ உள்ளது. ஆகவே, இப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை, விசாரித்த நீதிமன்றம் மனுதாரர் கேரள உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியிருந்தது. இப்படிப்பட்ட சூழலில் தான், டெல்லி ஜே.என்.யு. மாணவர்கள் மத்தியில் ’தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்தை அப்பட குழுவினர் திரையிட்டு காண்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.