திராவிட மாடலை கதறவிட்ட மலைடா….அண்ணாமலை !

திராவிட மாடலை கதறவிட்ட மலைடா….அண்ணாமலை !

Share it if you like it

2023-ம் ஆண்டு தைப்பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ₹1000 ரொக்கம், அரிசி மற்றும் சர்க்கரை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

விவசாயிகள் கரும்பு கொள்முதல் :-

கரும்பு விவசாயிகளிடம் போதுமான கரும்புகளை தமிழக அரசு கொள்முதல் செய்யவில்லை. இதனால் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படாமல், 1000 ரூபாய் பணமும், அரிசி, சர்க்கரை மட்டும் கொடுத்ததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். பொங்கல் பண்டிகைக்காக கரும்பு பயிரிட்டுள்ளதாகவும் இதை திமுக அரசு கொள்முதல் செய்யாவிட்டால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்றும் விவசாயிகள் முன்பு அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் திமுக அரசு விவசயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் விவசாயிகளின் வயிற்றில் அடித்தது திமுக அரசு.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் இல்லையெனில் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படுவதாக போராட்ட தேதியை அறிவித்தார். இதனை பார்த்து பயந்த திமுக அரசு, பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் சேர்த்து வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

அன்னூர் தொழிற்பேட்டை திட்டம் :-

கோவை மாவட்டம் அன்னூர் கிராமத்தில் தொழிற்பேட்டை அமைக்க திமுக அரசு திட்டமிட்டது. இதற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) 3,832 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்த உள்ளது. இருப்பினும், இந்த அறிவிப்பு தொடர்பான சுற்றறிக்கையை, முக்கிய பங்குதாரர்களான விவசாயிகளுடன் கலந்துரையாடாமல், டிட்கோவால் (TIDCO) கோவை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டது.

விவசாயிகளின் நிலம் பாழாய் போகாமல் இருக்க இந்த திட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுடன் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தைத் தொடர்ந்து, ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அடிபணிந்து விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை திரும்பப் பெற்றது.

தீபாவளி ஸ்வீட் :-

தீபாவளி கொள்முதலில் சிறிய நிறுவனங்கள் ஆங்காங்கே உள்ள போக்குவரத்து கழகங்களில் ஆர்டரைப்பெற்று சப்ளை செய்து வந்தன. இவை அனைத்தும் லட்சக்கணக்கான ரூபாய் ஆர்டர்களே. ஆனால் திடீரென இந்த டெண்டர்களில் பங்குபெற குறைந்தப்பட்சம் ஆண்டுக்கு ரூ.100 கோடி டர்ன் ஓவர் செய்யும் நிறுவனங்கள் மட்டுமே பங்குபெற வேண்டும் என விதி திருத்தப்பட்டது.

இதனால் சிறிய நிறுவனங்கள் பங்கேற்பது இயலாமல் போவதும், மிகப்பெரிய ஒரே நிறுவனம் மட்டுமே பங்குபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ​​திமுக போக்குவரத்து துறை அமைச்சரின் மகனுக்கு சொந்தமான ஒரு நிறுவனத்திற்கு சாதகமாக இருப்பதாக விவாதங்கள் எழுந்தது. இதன்மூலம் மிகப்பெரும் தொகையானது கமிஷனாக பெறப்படும் வாய்ப்புள்ளதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மறுபுறம் அரசின் ஆவின் நிறுவனம் இருக்கும்போது அங்கு கொள்முதல் செய்யாமல் தனியாரை நோக்கி ஏன் புதிய திமுக அரசும் செல்லவேண்டும் என்கிற வாதமும் வைக்கப்பட்டது.

இதனை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தை கொன்று தனியார் நிறுவனத்திற்கு தீபாவளி டெண்டரை வழங்கிய திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். திமுக அரசு எதிர்பார்த்தது போலவே தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டெண்டரை வாபஸ் பெற்று அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்துக்கு வழங்கியது.

பட்டின பிரவேசம் :-

4 மே 2022 அன்று, பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த பழமையான “பட்டின பிரவேசம்” என்ற தர்மபுரம் ஆதீனத்தின் மடத்துத் தலைவரைப் பல்லக்கில் ஏற்றிச் செல்லும் சடங்குக்கு திமுக அரசு தடை விதித்தது. இதனை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் வந்து திமுக சித்தாந்தம் பிறக்கும் முன்பே நடைமுறையில் இருந்ததாகவும், இந்த தடையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அண்ணாமலையின் எதிர்ப்பினை தொடர்ந்து திமுக அரசு மனம் தளர்ந்து தடையை நீக்கியது.

தெற்கு ரத வீதிக்கு கலைஞர் கருணாநிதி பெயர் :-

12 மே 2022 அன்று,திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கலைஞர் கருணாநிதி சாலை என பெயர் சூட்ட வேண்டும் என திருவாரூர் நகரசபை முடிவெடுத்தது. இதையடுத்து, விரைவில் பெயர் மாற்றப்படும் என தகவல் வெளியானது. திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி பெயரை சூட்டக்கூடாது என வலியுறுத்தி பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திருவாரூரில் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு பிறகு திருவாரூர் தெற்குரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

கோவில் நிதியில் முதியோர் இல்லம் :-

கோவில் நிதியில் முதியோர் இல்லம் திறக்கும் திட்டத்தை திமுக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து, பாஜக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் முதியோர் இல்லங்களுக்கு கோயில் நிதியைப் பயன்படுத்தும் திட்டத்தை ரத்து செய்தது.

இவ்வாறு மக்களுக்கு எதிராக திமுக அரசு எடுத்த செயல்பாடுகளில் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து அதில் வெற்றியும் பெற்றதை நாம் காண முடியும். இதுபோல் திமுக அரசு மக்களுக்கு செய்த ஒரு நிகழ்வையும் சொல்ல முடியாது. இந்த திமுக அரசை “திராவிட மாடல்” என்பதற்குப் பதிலாக “யூ-டர்ன் மாடல்” என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.


Share it if you like it