காஞ்சிபுரம் தொகுதியில் அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்துக் கொண்டிருந்த போது, பெண்கள் அடிப்படை பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து மதுராந்தகத்தில் அமைச்சர் உதயநிதி பிரசாரத்தில் பேசியதாவது:
கடும் நிதி நெருக்கடியின் போது திமுக ஆட்சிக்கு வந்தது. கொரோனா தடுப்பூசி குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் முதல்வர் ஸ்டாலின். தமிழக மக்கள் கொரோனா தடுப்பூசி குறித்து நாட்டிற்கே விழிப்புணர்வு செய்தனர்.
பெண்களுக்கான இலவச பஸ் திட்டத்தால், பெண்கள் பயன் பெற்றுள்ளனர் என உதயநிதி பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் தங்கள் பகுதியில் பஸ்கள் நிற்காமல் செல்கிறது. இது சரி செய்யப்படுமா என எழுப்பினார். கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்றும் கேட்டார்.
இதனை கேட்ட உதயநிதி சற்று சமாளித்தவாறு பதில் அளித்தார். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முன்னதாக சில பெண்கள் விளையாட்டு மைதானம் அமைத்து தாருங்கள் என கேட்டனர். இதற்கு காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளர் செல்வத்தை 5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். கோரிக்கையை நிறைவேற்றி தருகிறேன் என பதில் அளித்தார்.
உதயநிதி பிரசாரம் செய்துக் கொண்டிருந்த போது, பெண்கள் அடிப்படை பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது.