சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டியில் ஜவஹர் மில் பகுதியைச் சேர்ந்த பிரபுராஜா என்பவர்,காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தன்னிடம் வேலை கேட்டு என் வீட்டுக்கு 26ம் தேதி காலை, பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த மும்தாஜ் மற்றும் பிரபாத்தைச் சேர்ந்த நித்யா ஆகிய இரண்டு பெண்கள் வந்தனர். அவர்களை வீட்டிற்குள் அழைத்து பேசியபோது, திடீரென அப்பெண்கள் தனது மேலாடைகளை கழற்றி அரை நிர்வாணத்தில் நின்றனர். இதை பெண்களின் கூட்டாளியான சேலம், கோட்டையைச் சேர்ந்த உமர்பாரூக், மொபைல் போனில் படம் எடுத்துள்ளார். இவர்கள் மூவருடன், லைன்மேடைச் சேர்ந்த பயாஸ், கோட்டை பாட்ஷா, கோகுல், ஆகியோரும் சேர்ந்து, பிரபு ராஜாவை மொபைல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன பிரபு ராஜா ஒன்றை லட்சம் ரூபாய் அவர்களுக்கு கொடுத்துள்ளார். மேலும், 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டவே, போலீசில் புகார் அளித்துள்ளார் பிரபுராஜா. இந்த புகாரை விசாரித்த பள்ளப்பட்டி போலீசார்,மும்தாஜ், நித்யா, உமர்பாரூக் உள்ளிட்ட ஆறு பேரை நேற்று கைது செய்தனர்.

பெண்களை வைத்து பணம் பறிக்கும் கும்பலை கைது செய்த காவல்துறை !
Share it if you like it
Share it if you like it