துடிக்க துடிக்க கொலை செய்த பாதிரியார் : அதிர்ச்சி சம்பவம் !

துடிக்க துடிக்க கொலை செய்த பாதிரியார் : அதிர்ச்சி சம்பவம் !

Share it if you like it

கிறிஸ்த்துவ மதபோதகர் ஒருவர் தன் மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் என்று ஆசை காட்டி மதமாற்றத்தில் ஈடுபடும் பாதிரியார் தன் மனைவி மீது சந்தேகப்பட்டு வாயில் துணியை திணித்து கழுத்தை நெறித்து கொலை செய்து கொலையை மறைத்து நாடகமாடியுள்ளார்.

சென்னை நாவலூர் அருகே ஒட்டியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் விமல் ராஜ், இவரது மனைவி வைஷாலி இவர்கள் பொன்மார் ஊராட்சி பகுதியில் வசித்து வந்துள்ளனர். விமல் ராஜ் அதே பகுதியில் உள்ள சர்ச்சில் உதவி போதகராக இருந்துள்ளார். மனைவி மீது கணவனும் கணவன் மீது மனைவியும் சந்தேகம் ஏற்பட்டு கருத்து வேறுபாடால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது.

நேற்று முன்தினம் மாலை கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கும் பிரச்சினை உருவாகியுள்ளது மனைவி கணவனை பார்த்து நீ வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறாய் என்று கூற ஆத்திரமடைந்த பாதிரி விமல் ராஜ் மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதில் ஆத்திரமடங்காத கணவர் மனைவியின் வாயில் துணியை திணித்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இதை மறைக்க நண்பரோடு சேர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போல் அழைத்துச் சென்று பாதி வழியில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறி வீட்டிற்கு எடுத்து வந்து பொதுமக்களின் பார்வைக்கு அஞ்சலி செலுத்த வைத்துள்ளார். அஞ்சலி செலுத்த வந்த உறவினர்கள் கழுத்து மற்றும் உடற்பகுதியில் காயம் இருப்பதை பார்த்து சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் காவல் நிலையம் அழைத்துச் சென்ற பாதிரி விமல் ராஜை காவல்துறை நன்கு சிறப்பான முறையில் விசாரித்ததில் எப்பொழுதும் பொய் பேசி வந்த விமல் ராஜ் உண்மையை ஒத்துக் கொண்டதால் காவல்துறையினரால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தேவாலயத்திற்கு வரும் கிறித்தவர்களுக்கு ஒரு தீராத கேள்வி….???? தன் மனைவி சந்தேகத்திற்கு பாவமன்னிப்பு வழங்காமல் அன்பு போதனை செய்யாமல் ஜபம் செய்து தீர்க்காமல் கொலை செய்யலாமா.?


Share it if you like it