10-வது முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றிய பிரதமர். அடுத்த ஆண்டு செங்கோட்டையில் சந்திப்போம் என உறுதி

10-வது முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றிய பிரதமர். அடுத்த ஆண்டு செங்கோட்டையில் சந்திப்போம் என உறுதி

Share it if you like it

வாரிசு அரசியலை ஒழித்துக் கட்டுவதே நோக்கம் என்றும் மீண்டும் மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்றும் பிரதமர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

டெல்லி செங்கோட்டையில் 10-வது முறையாக தேசியக்கொடி ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, ‘நாட்டின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள்’ என முழங்கியுள்ளார்.1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இந்தியாவை அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் ஆண்டது.அதிலும் பெரும்பாலான ஆண்டுகள் ஜவஹர்லால் நேருவின் குடும்பமே ஆதிக்கம் செலுத்தியது. அந்த ஆதிக்கம் இன்றளவும் காங்கிரசை விட்ட பாடு இல்லை. இதன் தாக்கமே இந்தியா எனும் பரந்து விரிந்த நாடு அதுல பாதாளத்துக்கு சென்றய காரமானது.தனிக்கட்சியாய் ஆட்சியை பெற்றகாங்கிரஸ் தானும் தேய்ந்து நாட்டையும் தேய்த்தது.ஒரு சில கட்சி கூட்டணி, என தொடங்கி பல கட்சி கூட்டணி என மாறி, ஆட்சியை காப்பாற்றுவதற்காக ஒரு எம்பி வைத்துள்ள கட்சி கட்சிகளுடனும் கூட்டணி வைத்தது. UPA-1,UPA-2 என நாட்டை பத்தாண்டு காலம் ஆட்சி செய்து பல ஆண்டுகாலம் பின்னுக்கு இழுத்துச் சென்றது. மலிந்து போன ஊழல், பல ஆண்டுகளாக அமைச்சர்களாய், எம்பி களாய், எம்எல்ஏ களாய் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் தலைவர்கள், இனம், மொழி, கலாச்சாரத்தை வேறுபடுத்தி ஓட்டு லாபம் பெற்ற வரலாறு.சிறுபான்மை சமூகத்தை செய்து வைத்து விளையாடிய அரசியல் சதுரங்க விளையாட்டு என எண்ணற்ற காங்கிரஸ் கட்சியின் செயல்களால், நம்மை காட்டிலும் சிறிய நாடுகளும் பொருளாதாரத்தில் முன்னேறி இந்தியாவை பரிகாசம் செய்யும் நி நிலை ஏற்பட்டது. அண்டை நாடுகள் அச்சமின்றி இந்திய அரசியலில் தலையிடும் சூழலும் உண்டானது.

தெற்கு வடக்கு வடகிழக்கு என மாநிலம் தோறும் வெவ்வேறு அரசியலை விளையாடியதன் விளைவாக நாடு சந்தித்த இன்னல்கள் பல.இனி காங்கிரஸ் ஆட்சியே வேண்டாம் என எண்ணிய இந்திய மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியை கட்சியிடம் ஆட்சியை ஒப்படைத்தனர்.2014ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி சமரசம் இல்லாத அரசியலை நடத்தினார். இனம், மொழி, கலாச்சார வேறுபாட்டை கடந்து மக்களை நேசித்து இந்தியா முழுவதும் பயன்பெறும் திட்டங்களை தீட்டினார். நாட்டைப் பிளவுபடுத்தும் சட்டங்களை ஒழித்து கட்டினார். குடியுரிமை திருத்த சட்டம், முத்தலக் ரத்து, காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கம் உள்ளிட்ட சட்டங்களை துணிச்சல் உடன் செயல்படுத்தினார்.

‘ஐயோ நாடு துண்டாகிவிடும்’ ‘பிரதமர் நரேந்திர மோடி வேறுபாட்டை விதைக்கிறார்’ என்றெல்லாம் எதிர்மறை அரசியல் செய்தன காங்கிரசும் அதன் தோழமைக் கட்சிகளும் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமான சட்டதிட்டங்களை வைத்து செயலாற்றுவது நாட்டில் முன்னேற்றத்திற்கு கேடு என கருதிய பிரதமர் இந்தியா எனும் பெரும் தேசத்திற்கு ஏற்ற வகையில் சட்டதிட்டங்களை தீட்டி வருகிறார். அதே வேளையில் விவசாயம், தொழில் துறை, கல்வித்துறை, உள்நாட்டு கட்டமைப்பு, அயல் நாட்டு உறவு என அனைத்து வகையிலும் நாட்டை முன்னேற்றி வருகிறார்.மோடியின் சிறப்பான ஆட்சியை மக்கள் புரிந்து கொண்டனர் .ஆனால் ஆற்றாமையால் இருந்த காங்கிரசும் அதன் தோழமைக் கட்சிகளும் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டார் என பிரச்சாரம் செய்தன. சிறுபான்மை மக்கள் ஓட்டு வங்கியை வைத்து வழக்கம்போல் அரசியல் நகர்வுகளை நிகழ்த்தின. ஆனாலும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அசுர பலத்துடன் பா.ஜ.க-வை மக்கள் ஆட்சியில் அமர்த்தினர். கூடுதல் உத்வேகத்துடன் பிரதமரும் அவரது அமைச்சர்களும் பணியாற்றி வருகின்றனர். ஊழலை நாட்டில் இருந்து அறவே அகற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் பிரதமர்.ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன. ஆண்டாண்டு காலமாய் குடும்ப ஆட்சி நடத்துவது, சிறுபான்மை மக்களின் ஓட்டு வங்கியை வைத்து அரசியல் செய்வது என இருந்த கூட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியான அரசியல் நடவடிக்கையால் அச்சம் கொண்டுள்ளன.

இந்த சூழலில் தான் செங்கோட்டையில் 10- வது முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மணிப்பூரில் அமைதி திரும்பும், அமைதி திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என உறுதி அளித்தார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது என பெருமிதம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி 140 கோடி மக்களுக்கும் தனது மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 2014 ஆம் ஆண்டில் 10-வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா, தற்போது 5-வது பெரிய பொருளாதாரமாக மாறி, உலகத் தரவரிசையில் இடம் பிடித்துள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர் 13.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவித்தார். மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கான நிதி மாற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் கருவூலத்திலிருந்து ரூ.70,000 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஏழைகளுக்கான வீட்டு வசதி நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு ரூ. 10 லட்சம் கோடி யூரியா மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொழில் தொலைதொடர்புத் துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி மாபெரும் மாற்றத்தை அடைந்துள்ளதாகவும் பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்தார். ஊழல் நாட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரணம் என பிரதமர் தெரிவித்தார். இரண்டாவது, வாரிசு அரசியல் நம் நாட்டை சீரழித்து விட்டதாக பிரதமர் வேதனையுடன் குறிப்பிட்டார்.  மூன்றாவதாக வஞ்சகத்தன்மையை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த வஞ்சகத்தன்மை தான் நாட்டின் அடிப்படை சிந்தனையை, நமது இணக்கமான தேசிய பண்பாட்டை களங்கப்படுத்தி விட்டதாகவும் தெரிவித்தார். ஊழலுக்கு எதிரான வெறுப்பு சூழலை நாம் உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். பெண்கள் நலன் குறித்து பேசிய பிரதமர் 2 கோடி சகோதரிகளை லட்சாதிபதிகளாக உயர்த்த மத்திய அரசு பணியாற்றி வருவதாக குறிப்பிட்டார்.இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் புதிய அறிவிப்பு ஒன்றை பிரதமர் அறிவித்தார்.

வரும் நாட்களில் விஸ்வகர்மா ஜெயந்தி முன்னிட்டு பாரம்பரிய கைவினையில் நிபுணத்துவம் பெற்ற தனி நபர்கள், குறிப்பாக ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பயனடை ‘விஷ்வகர்மா யோஜனா’ என்ற ஒரு திட்டத்தை ரூ. 15,000 கோடி மதிப்பில்  தொடங்க உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் நெசவாளர்கள், பொற்கொல்லர்கள், கொல்லர்கள், சலவை தொழிலாளர்கள் முடி திருத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என தெரிவித்த பிரதமர், கூடுதலாக 15,000 மக்கள் மருந்தக மையங்களை திறக்க முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த முழுக்கத்துடன் அடுத்தாண்டு செங்கோட்டையில் சந்திப்போம் என உறுதிபடத் தெரிவித்தார். நேர்மையான சிந்தனை, அயராத உழைப்பு, நாட்டின் முன்னேற்றமே ஒரே குறிக்கோள் என பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் சுதந்திர தின விழா உரையாக வெளிப்பட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.


Share it if you like it