திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சியாக முப்போகம் விளையும் நிலமான 3200 ஏக்கர் பூமியை தரிசு நிலம் என தவறாக வகைப்படுத்தி நிலம் கையகப்படுத்துவற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு போடப்பட்டு பின்பு பல எதிர்ப்பிற்கு பிறகு தமிழக அரசு குண்டாஸ் வழக்கை ரத்து செய்து விவசாயிகளை விடுதலை செய்தது. இந்தநிலையில் வயது முதிர்ந்த ஏழை பெண்களுக்கு பணம் கொடுத்து மேல்மா சிப்காட் திட்டத்திற்கு ஆதரவாக போராடுவதற்கு ஆட்களை ஆளுங்கட்சி திரட்டிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதுதொடர்பாக தற்போது அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் என்பவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :- மேல்மாவில் ஆளுங்கட்சியின் அடுத்த டிராமா மெயின் ரோட்டில் ஷெட் அமைத்து குண்டாஸ் போலீஸ் பந்தோபஸ்துடன் விவசாயிகள் என்ற பெயரில் ஒரு கூட்டத்தை வரவழைத்து எங்கள் நிலங்களை சிப்காட்டிற்கு எடுத்து கொள்ளுங்கள் என்று போராட உள்ளார்களாம். உலக வரலாற்றிலேயே எங்கள் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று செட் அப் போராட்டம் நடத்தும் பெருமை நம் ஆளும் கட்சி திமுகவையே சேரும் .முதல்வர் ஸ்டாலின் வேற லெவல் !