மரணங்களுக்கு காரணம், மாநில அரசின் அலட்சியமே – நாராயணன் திருப்பதி !

மரணங்களுக்கு காரணம், மாநில அரசின் அலட்சியமே – நாராயணன் திருப்பதி !

Share it if you like it

பட்டாசு தொழிற்சாலைகளில் தொடர்ந்து மரணங்கள் அதிகரித்து வருவதாகவும், இதனை தடுப்பதற்கு மாநில அரசானது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாகவும் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி குற்றசாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில்,

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தொடரும் இந்த பட்டாசு தொழிற்சாலை மரணங்களுக்கு காரணம், மாநில அரசின் அலட்சியமே. உரிமம் இல்லாமல் நடைபெறும் உற்பத்தி, விதிகளை பின்பற்றாமல் அல்லது பாதுகாப்பு விதிகளை மீறி நடைபெறும் தொழிற்சாலைகள் இயங்குவது அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் லஞ்சம், ஊழலினால் தான். ஒவ்வொரு முறையும் இது போன்ற மரணங்கள் நிகழு‌ம் போது சில லட்சங்களை இழப்பீடாக வழங்கி விட்டு அடுத்த மரணங்களை எதிர் நோக்கி காத்திருப்பது வெட்கக்கேடு. உடனடியாக இதற்கு தீர்வு காணப்பட வேண்டும். சிவகாசியில் உள்ள பெரிய பட்டாசு நிறுவனங்களை ஆலோசித்து தீர்வு காண முனைய வேண்டும் தமிழக அரசு.

மேலும், இந்த மரணங்களுக்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it