கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் !

கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் !

Share it if you like it

18-ஆவது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக முதற்கட்ட தேர்தலில் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

2 ஆம் கட்டமாக வரும் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டத்தில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகள், கர்நாடகத்தின் 14 தொகுதிகள், ராஜஸ்தானின் 13 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தின் 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

போலவே மகாராஷ்ட்ராவின் 8 தொகுதிகள், மத்தியப்பிரதேசத்தின் 7 தொகுதிகள், அசாமின் 5 தொகுதிகள், பீகாரின் 5 தொகுதிகள்,சத்தீஸ்கரின் 3 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தின் 3 தொகுதிகள் மணிப்பூர், திரிபுரா மற்றும் ஜம்மு, காஷ்மீரின் தலா ஒருதொகுதிக்கு வரும் 26 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இரண்டாம்கட்ட தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it