காலம் காலமாக ஹிந்துஸ்தானத்தின் பாதுகாவலர்களாக காவல் கொடுக்கும் எல்லைச்சாமிகளான சீக்கிய சகோதரர்கள்

காலம் காலமாக ஹிந்துஸ்தானத்தின் பாதுகாவலர்களாக காவல் கொடுக்கும் எல்லைச்சாமிகளான சீக்கிய சகோதரர்கள்

Share it if you like it

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கை காரணமாக தங்களின் மத உணர்வுகள் தங்கள் மதத்தின் பாரம்பரிய அடையாளமாக இருந்த பொற்கோவில் சிதைக்கப்பட்டது தங்களின் தன்மானம் சிதைக்கப்பட்டதாகவே சீக்கிய மக்கள் உணர்ந்தார்கள். அதன் விளைவுகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தியது. சில மாதங்களிலேயே இந்த ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்கும் பப்பர் கால்சா அமைப்பின் தலைவர் பிந்தரன் வாலே மரணத்திற்கும் காரணமாக காலிஸ்தான் பயங்கரவாதிகள் குறி வைத்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவரது அலுவலக இல்ல வளாகத்திலேயே தனது மெய்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதன் பிறகு நடந்த பெரும் கலவரத்தில் பல ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் ஆண் பெண் குழந்தைகள் வேறுபாடு இன்றி கொடூரமாக கொல்லப்பட்டார்கள் .சீக்கிய பெண்கள் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பல ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் ஆறாத காயங்களோடு பாரதத்தை விட்டு வெளியேறி கனடா பிரிட்டன் ஆஸ்திரேலியா ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அகதிகளாக அரசியல் தஞ்சம் புகுந்தார்கள். ஆண்டுகள் மாறினாலும் அவர்களின் தனிநாடு கோரிக்கை அதை முன் வைத்து திட்டமிட்டு வளர்க்கப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதம் ஆட்சியாளர்களின் நம்பிக்கை துரோகத்தால் சிதைக்கப்பட்ட அவர்களின் பொற்கோவில் அனைத்திற்கும் மேலாக இந்தியாவின் கொலையை முன்வைத்து சீக்கியர்களுக்கு எதிராக திட்டமிட்டு கட்டவிழ்க்கப்படப்பட்ட இனப்படுகொலை எல்லாம் அவர்களை சொந்த மண்ணில் அகதியாக உலகம் முழுவதும் விதேசிகளாக அலைய வைத்தது.

காலம் காலமாக ஹிந்துஸ்தானத்தில் மண்ணின் மைந்தர்களாக தேசிய தெய்வீக உணர்வோடு வளர்ந்து வாழ்ந்தவர்கள் சீக்கியர்கள் அவர்களின் உயிருக்கும் மேலாக நேசித்தது அவர்கள் இந்த தேசத்தின் இறையாண்மையையும் அவர்களின் சீக்கிய மத உணர்வுகளையும் தான் ஆனால் அந்த மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டு அவர்களின் பாரம்பரிய பொக்கிஷமான பொற்கோவில் சிதைக்கப்பட்டது எந்த தேசத்தின் பாதுகாப்பிற்காக அவர்கள் காலம் காலமாக உயிர் தியாகம் செய்து வந்தார்களோ? எத்தனையோ இழப்புக்கள் துயரங்களைக் கடந்து வந்தார்களோ ? அந்த தேசம் அவர்களின் கோரிக்கைகளை உரிமைகளை உணர்வுகளை அலட்சியப்படுத்தியதால் அவர்கள் அந்நியமாக உணர தொடங்கினார்கள்.

பல்வேறு நாடுகளில் அகதிகளாக அவர்கள் வாழ்ந்து வந்தாலும் தங்களின் முன்னோர்கள் வாழ்ந்த தங்களின் சீக்கிய மதம் பிறந்த பூர்வீக பூமியான காலிஸ்தான் என்று அவர்கள் கருதும் இன்றைய பஞ்சாப் ஹரியானா பாகிஸ்தானின் சிந்து பஞ்சாப் மாகாணங்களை சுற்றி அவர்களை மனம் அலைந்தது. ஆனால் புண்பட்டு இருந்த சீக்கிய மக்களின் உணர்வுகளை பல்வேறு சர்வதேச நாடுகளும் இந்தியாவிற்கு எதிரான ஒரு வியூகமாக பயன்படுத்த தொடங்கியது. அதன் விளைவு காலிஸ்தான் பயங்கரவாதம் பல்வேறு நாடுகளின் ஆதரவோடு உலகம் முழுவதும் வேர் விட்டு கிடப்பரப்பி வளர தொடங்கியது பல்வேறு நாடுகளில் இந்தியாவின் ராஜ்ய உறவுகளுக்கு எதிராகவும் அங்கிருக்கும் இந்தியர்கள் இந்துக்களின் பாதுகாப்பிற்கு எதிராகவும் அவர்கள் லாபி செய்ய தொடங்கினார்கள்.

இதில் சில அமைப்புகள் பாகிஸ்தானின் ஆதரவோடு உருவாகி செயல்பட தொடங்கியவை . அவற்றின் ஒரே நோக்கம் இந்திய அரசுக்கு எதிராக லாபி செய்வதும் இந்திய மண்ணில் பயங்கரவாத செயல்களை கட்டவிழ்த்து விடுவதும் பொது அமைதி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எடுப்பதும் மட்டும்தான். அந்த வகையில் பாகிஸ்தானின் ஆதரவோடும் துணையோடும் காலிஸ்தான் பயங்கரவாதம் அச்சுறுத்தலாக வளர தொடங்கியது. அதன் சாட்சியம்தான் இன்று வரை காலிஸ்தான் பயங்கரவாதத்தின் பல்வேறு முக்கிய பிரிவுகளும் அதன் தலைவர்களும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ராணுவம் உள்ளிட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பும் இணக்கமான நல்லுறவும் கொண்டிருப்பது .

மேலும் காலிஸ்தான் பயங்கரவாதம் பின்னணியில் இருந்து இந்தியாவில் நடத்திய வேளாண் திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் மல்யுத்த வீரர்கள் போராட்டம் உள்ளிட்டவற்றிற்கு இங்கிருக்கும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளும் பாகிஸ்தானின் அரசு உளவுத்துறை உள்ளிட்டவை பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தது. அதேபோல இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக விஷமப் பிரச்சாரம் செய்யப்பட்டு எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்ட போராட்டம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிரான போராட்டம் உள்ளிட்டவற்றில் எல்லாம் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உள்நாட்டு இஸ்லாமிய ஆதரவு அமைப்புகள் உள்ளிட்டவற்றிற்கு முழு பின்புலமாக காலிஸ்தான் அமைப்புகளும் அதன் பயங்கரவாத நிதி ஆதாரங்களும் பெருமளவில் துணை நின்றது.

அந்த வகையில் இஸ்லாமிய பயங்கரபாதமும் காலிஸ்தான் பயங்கரவாதமும் இந்திய எதிர்ப்பு , இந்து இந்திய விரோதம் என்ற ஒரு புள்ளியில் இணைந்து செயல்பட தொடங்கியதை சமீப காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளில் கண்கூடாக பார்க்க முடிந்தது. ஆனால் பாரதத்தில் இருக்கும் சீக்கிய மக்கள் இந்த காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டையும் ஐஎஸ்ஐ உடனான இணக்கமான போக்கையோ விரும்பவில்லை . காரணம் அவர்கள் சீக்கிய மதம் என்றொரு தனி மத பண்பாட்டு வழியில் வாழ்ந்தாலும் நாம் எப்போதும் ஹிந்துஸ்தானத்தின் மண்ணின் மைந்தர்கள். நம்முடைய சீக்கிய மதமும் இந்த ஹிந்துஸ்தானத்தின் மண்ணில் பிறந்த மதம் தான் என்ற உண்மையான புரிதலும் நல்லெண்ணமும் அவர்களிடத்தில் இன்றளவும் இருக்கிறது.

சுதந்திரத்தில் பிரிவினை என்ற பெயரில் சீக்கியர்கள் அனுபவித்த அத்தனை கொடூரங்களையும் அவர்களோடு சேர்ந்து இந்துக்கள் அனுபவித்ததை அவர்கள் புரிந்து கொண்டு உள்ளார்கள். இந்த மண்ணில் ஆயிரம் ஆண்டுகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளானபோது இந்துக்கள் அனுபவித்த அத்தனை கொடூரங்களையும் சீக்கியர்களும் அனுபவித்த வரலாற்றின் படிப்பினைகளை பாரதத்தில் உள்ள சீக்கியர்கள் இன்றளவும் உணர்ந்தே நடக்கிறார்கள். அதன் விளைவு அவர்கள் ஒன்றுபட்ட இந்தியர்களாக அவர்களின் சீக்கிய மத பாரம்பரியத்தோடு கௌரவமாக வாழ வேண்டும் என்ற தேசிய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள். அதே நேரத்தில் கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் அவர்களுக்கு செய்த நம்பிக்கை துரோகங்களையும் வாக்கு வங்கி அரசியலுக்காக சீக்கிய மக்கள் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டதையும் இனப்படுகொலை செய்யப்பட்டதையும் அவர்கள் மறக்கவில்லை.

திட்டமிட்ட இனப்படுகொலையாக இந்திராவின் கொலையின் போது கொடூரமாக கொல்லப்பட்ட குடும்பங்களை இழந்து அகதிகளாக உலகம் முழுவதும் அல்லலூரும் தங்களின் சகோதரர்களின் கண்ணீரையும் இழப்பையும் அவர்கள் மறக்கவோ தயார் இல்லை . அதன் வெளிப்பாடு தான் இன்று வரையில் பஞ்சாப் ஹரியானா உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் தனித்து நின்று தேர்தலில் அரசியல் களம் காண இயலாத நிலை . இந்திரா காந்தி ராஜீவ் காந்தி உள்ளிட்டவர்களின் உருவ சிலைகளை இன்றளவும் அந்த மாநிலங்களில் நிறுவ முடியாத நிலை. ஜெகதீஷ் டைட்லர் பிரபு படேல் உள்ளிட்ட சீக்கியர்களுக்கான இனப்படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்றளவும் சீக்கியர்களின் முன்னே நிற்க கூட முடியாத நிலை. அந்த வகையில் சீக்கியர்கள் அவர்களின் தன்மானம் சுய கௌரவத்தையும் விட்டுக் கொடுக்க தயார் இல்லை . அதே நேரத்தில் அவர்கள் என்றைக்கும் இந்துஸ்தானத்தின் மைந்தர்கள்.பாரதத்தின் தேசிய இறையாண்மை வழியில் வாழும் புத்திரர்கள் என்ற நிலையில் இருந்தும் அவர்கள் விலகியதில்லை.

பாரதிய சீக்கியர்கள் பிரிவினையை உண்மையில் ஆதரித்து இருந்தால் இந்திய அளவில் உளவுத்துறை பாதுகாப்பு காவல்துறை உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் அவர்களின் அதிகாரங்களை தங்களின் தனிநாடு கோரிக்கையை ஆதரிக்கும் வகையில் பயன்படுத்தி இருப்பார்கள் . ஆனால் இன்று வரை அவர்களின் வீரம் வீரம் துணிவு அனைத்தையும் தேசத்தின் நலனுக்காகவே அர்ப்பணித்து வாழ்கிறார்கள். விவசாயிகளாகவும் பாதுகாப்பிற்காக காவல் காக்கும் அதிகாரிகளாகவுமே இன்றளவும் வலம் வருகிறார்கள் . அவர்கள் ஹிந்துஸ்தானத்தை தாய் பூமியாக சீக்கிய மதத்தை அவர்களின் தெய்வீக உணர்வாக எந்த அளவு நேசிக்கிறார்களோ? அதே அளவில் பாரத தேசத்தின் இறையாண்மையையும் மதிக்கிறார்கள் என்பதே உண்மை . அதனால் தான் எவ்வளவோ இழப்புகள் துயரங்கள் கசப்புணர்வுகளை கடந்து வந்த போதிலும் அத்தனையும் ஆழ் மனதில் வைத்துக் கொண்டு இன்னும் பாரதத்தின் நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் வீர மரணம் தழுவுகிறார்கள். எதிரிகளை சம்ஹாரம் செய்யும் மாவீரர்களாகவும் பாரதத்தின் மாண்பை பாதுகாத்து வருகிறார்கள்.


Share it if you like it