மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக, டெல்லியில் தற்பொழுது விவசாயிகள் போராடி வருகின்றனர்.. இப்போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு கமிட்டி என்ற விவசாய சங்கத்தின் தலைவர் வி.எம். சிங் போலி முகம் தற்பொழுது மக்களுக்கு தெரியவந்துள்ளது..
காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்த சிங்கிற்கு சுமார் 631 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது..
2009 தேர்தலில் இவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் மூலம் இத்தகவல் கிடைத்துள்ளது.. சட்ட அமலாக்கத்துறை இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது மட்டுமல்லாமல்.. 2009-ம் ஆண்டின் படி, இவர் மீது வன்முறைகளில் ஈடுபட்டது தொடர்பாக எட்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றை எல்லாம் மறைத்து அப்பாவி விவசாயி போல் ஊடகங்களின் மத்தியில் கபட நாடகம் ஆடியுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…