திருவண்ணாமலையில் பேருந்துகளை சிறை பிடித்து பக்தர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அப்படி மறியலில் ஈடுபட்ட பக்தர்களை காவல் துறை மிரட்டியுள்ளதாக இந்து முன்னணி குற்றச்சாட்டை வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில்,
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்காக வருடம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் வருன்றனர். அதேபோல இந்த ஆண்டும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர்…
லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியது அறநிலையத்துறையின் கடமை. பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக 2500 பேருந்துகளை இயக்குவோம் என உறுதி கூறிய அறநிலையத்துறை சொன்னபடி பேருந்துகளை இயக்கவில்லை…
கண்துடைப்புக்காக ஒவ்வொரு முறையும் அறிக்கைகளை வெளியிடுகிறது இந்த திராவிட மாடல் அரசின் அறநிலையத்துறை நிர்வாகம்…
கோவில்களின் வருமானம் வேண்டும். ஆனால் கோவில் விழாக்களுக்கு பக்தர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர மாட்டோம் என்று அடம் பிடிக்கும் இவர்களை இப்பொழுது பக்தர்கள் அடையாளங்காண தொடங்கி விட்டனர்.
அதனால் தான் திருவண்ணாமலையில் பல பேருந்துகளை சிறை பிடித்து பக்தர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்படி மறியலில் ஈடுபட்ட பக்தர்களை காவல் துறை மிரட்டியுள்ளது.
தொடர்ந்து தமிழகத்தின் மிக முக்கிய விழாக்களுக்கு நீதிமன்றம் மூலமாக பல உரிமைகளை இந்துக்கள் கேட்டு பெற வேண்டியுள்ளது. இந்த நிலையை மாற்ற அறநிலையத்துறை அனைத்து கோவில்களிலும், கோவில் திருவிழாக்களிலும் பக்தர்களுக்கு தேவையான உரிய வசதிகளை செய்து தர வேண்டுமென இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது..இவ்வாறு இந்து முன்னணி குறிப்பிட்டுள்ளது.