பிரம்மாண்டமான ஹிந்து கோவிலை கட்டி கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆசையை அமீரக அரசு நிறைவேற்றியுள்ளது – மோடி !

பிரம்மாண்டமான ஹிந்து கோவிலை கட்டி கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆசையை அமீரக அரசு நிறைவேற்றியுள்ளது – மோடி !

Share it if you like it

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றிருந்தார். இதற்காக டெல்லியில் இருந்து நேற்று சிறப்பு விமானம் மூலம் பிரதமர் மோடி அமீரகம் சென்றடைந்தார். அங்கே அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அபுதாபியில் பிரம்மாண்டமான முதல் ஹிந்து கோவிலைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார், இது மனிதக்குல பாரம்பரியத்தின் மிக முக்கிய சின்னமாக விளங்கும் என்றும் மனித வரலாற்றில் தங்கத்தினாலான புதிய அத்தியாயத்தை எழுதியதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், “இந்த கோயில் உலகம் முழுவதும் மத நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய ஒற்றுமையின் அடையாளமாக மாறும் என்று நம்புகிறேன். இந்த பன்முகத்தன்மையில் வெறுப்பு நமது கண்களுக்குத் தெரிவதில்லை. பன்முகத்தன்மையை எங்கள் சிறப்பு என்று கருதுகிறோம் ! இந்த கோவிலில், ஒவ்வொரு இடத்திலும் பலவிதமான நம்பிக்கையைப் பார்க்க முடிகிறது.

இந்த பிரமாண்ட கோவிலை நிஜமாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் என்றால் அது வேறு யாருமல்ல.. என் சகோதரன் ஐக்கிய அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் தான்.. கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆசையை நிறைவேற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசை முழு மனதுடன் உழைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமின்றி 140 கோடி இந்தியர்களின் இதயங்களையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு வென்றுள்ளது.


Share it if you like it