சமூக நீதி என்பது யாதெனில் யாவர்க்கும் யாவும் பெறும் மார்க்கம் பொதுவெளியில் அதில் அவரவர் திறமைக்கேற்ற வெற்றி பெறும் இலக்கை வாய்ப்பாக வழங்குவதே .ஆனால் இங்கு சமூக நீதி என்பது பந்தய களத்தில் வேகமாக ஓடுபவனை களத்தில் இருந்து அப்புறப் படுத்தி விட்டு மித வேகமாக ஓடுபவனின் கால்களை கட்டி போட்டு நடப்பவனையும் நடை பழகுபவனையும் வைத்து பந்தயத்தில் வெற்றி என்று பறை சாற்றி அதையே சமூகநீதி என்று கொண்டாடுகிறது .
நடப்பவரையும் நடை பழகுபவவரையும் நான் குறைத்து மதிப்பிட வில்லை அதற்கென தனிக் களம் இருக்கட்டும் அதில் அவர்களை மெருகேற்றி ஓட்டப் பந்தய வீரர்களாக மாற்றி கொண்டு வந்து பந்தயக் களத்தில் இறக்குங்கள் அதுவே அவர்களின் திறமை தகுதியை மேம்படுத்தும் வேகமாக ஓடுபவனின் திறமையை தகுதியை மதித்து வாய்ப்பளியுங்கள் அவனது இயல்பான வெற்றி வாய்ப்பை தட்டி பறிக்கும் அநீதியை செய்யாதீர்கள் என்று கேட்கிறோம்.
வேகமாக ஓடுபவனின் வெற்றி வாய்ப்பு தான் மித வேகத்தில் ஓடுபவனுக்கு உந்து சக்தியாக மாறி அவனை மெல்ல மெல்ல வேகமெடுத்து ஓட வைக்கும்
ஆனால் நீங்கள் ஓடுபவனை களத்தில் இருந்து அப்புறப் படுத்தியதால் மித வேக ஓட்டக்காரன் போதிய ஊக்கம் உற்சாகம் இன்றி நம்பிக்கை தளர்ந்து திறமை குன்றி வெகு காலமாக பின் தங்கி கிடக்கிறான். இதுவா சமூக நீதி? இதுவே சமூக அநீதி
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடி வைத்த பாரதியின் மண்ணில் ஒரு சமூகத்திற்கே அநீதியை இழைப்போம் எனில் உண்மையில் நாம் எவ்வளவு தரம் தாழ்ந்த மக்கள்? அதுவும் அந்த மகாகவி பிறந்த சமூகத்திற்கே இப்பேர்பட்ட வாழ்நாள் துரோகம் செய்வதை அனுமதித்து அதை இன்றளவும் வேடிக்கை பார்ப்போம் எனில் நம்மில் பாரதியை மனதார நேசிக்கும் மனிதர்கள் இல்லை என்று தானே அர்த்தம்??
அவனை என் பாட்டன் முப்பாட்டன் என்று சொந்தம் கொண்டாடும் அருகதை நம்மில் யாருக்குமே இல்லை தானே ?
ஒரு சமூகம் சமூக நீதி என்ற பெயரில் சட்டத்தின் வடிவில் தன் திறமைக்கான வாய்ப்பு – வாழ்வாதாரம் குறைந்த பட்சம் வாழ்வுரிமை என்று அனைத்தையும் இழந்து சொந்த தேசத்தில். சமூக அகதி ஆகி விட்டது எனில் அதை செய்த சட்டம் எப்படி சமநீதி வழங்க முடியும்? அதை செய்த அரசாங்கம் எப்பேர்ப்பட்ட பிறழ் நெறி அரசாக இருந்திருக்க வேண்டும்? இதுவா அரச நீதி? இதுவல்லவோ அரச பயங்கரவாதம். ஆனால் இவ்வளவு நடந்த பிறகும் கூட அரசை எதிர்த்து போராட்டம் – கலகம் – கலவரம் செய்யாமல் கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி உழைத்து முன்னேறி வருகிறது எனில் அது வே அந்த சமூகத்தின் மாண்பு .
அதனால் தான் எங்கள் முன்னோர்கள் அந்த சமூகத்தை தங்களின் குரு ஸ்தானத்தில் போற்றி வாழ்ந்தார்கள் அதனால் தான் நம் முன்னோர்கள் உலகமே மெச்சும் படியான ஒரு பெரு வாழ்வு வாழ்ந்தார்கள் .இவ்வளவு அநீதிகளை கடந்து வந்த பிறகு கூட இதற்கு காரணமான சமூகம் – சட்டம்- தேசம் எதற்கும் துரோகம் செய்யாமல் இன்றளவும் என் கடன் பணி செய்து கிடப்பதே மற்றவை பகவானுக்கு அர்ப்பணம் என்று வாழும் அவர்களை விட மேன் மக்கள் இந்த உலகில் வேறு யாரும் இருக்க முடியுமா?
இன்றளவும் பல தலைமுறையாக இன்னலில் உழன்ற போதும் இன்னமும் தன் தாய் தர்மம் காத்து அதை யாசிப்பவருக்கு பயிற்றுவித்து தன்னை அண்டியவருக்கு வழிகாட்டி வாழும் மாட்சிமை தாங்கிய அவர்களுக்கு நாம் என்ன கைம்மாறு செய்தோம்? நம்மை வழி நடத்தும் ஒரு சமூகத்தின் வாழ்வை அழித்தோம். அவர்கள் தங்கள் வாழ்வை தேடி உலகெங்கும் போய் சென்ற இடமெல்லாம் செழிப்புற செய்து சீரும் சிறப்புமாகவே வாழ்கிறார்கள். ஆனால் நாமோ தர்மம் இது என்று வழிகாட்ட நாதியற்று வரைமுறையற்ற வர்களை எல்லாம் ஆள வைத்து அவர்களின் அனாச்சாரத்தை எல்லாம் நவீன கலாச்சாரம் என்று ஏற்றதன் விளைவாக அறிவில் தர்மம் மறைந்து, சிந்தனையில் அதர்மம் நுழைந்து வாழும் வாழ்க்கை நரகமாகி விடுபடவும் முடியாமல் விடையும் தெரியாமல் அனல் பட்ட புழுவாக உழல்கிறோம்.
ஆனால் இவ்வளவையும் செய்தவர்கள் இன்றைக்கும் கூட எல்லா தவறுகளுக்கும் அந்த திக்கற்ற சமூகத்தை சாடி தங்கள் அநீதியை வெளி வராமல் பார்த்துக் கொள்கிறார்கள். நாமோ எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல போகிறோம் நமக்கேன் வம்பு என்று. இந்த சூழ்ச்சி பற்றி உணர்ந்து இதற்கு முழுமையாக துணை நின்றவர்கள் இன்று எதுவும் தெரியாதவன் போலே மேலும் பிதற்றி தானும் கெட்டு நாட்டையும் மக்களையும் குழப்புகிறான். நாடும் வீடும் எப்படி சீர்படும்? நாமும் நமது அறிவும் தெளியாமல் எது தர்மம்? என்பது புலப்படாது . நம் சிந்தனையும் செயல்பாடும் சீர் படாமல் இங்கு தர்மம் தழைக்காது. இது எதுவுமே இல்லை என்றால் நமக்கு நம் சந்ததிக்கு இங்கு வாழ்க்கை இருக்காது. மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்
மத பயங்கரவாதம் செய்யும் கும்பலுக்கு வக்காலத்து வாங்கும் தேச துரோகிகள் சொல்வதென்ன? அவர்களை சந்தேகத்தோடு பார்ப்பதும் தவறுகளுக்கு தண்டனை வழங்குவதும் தான் அவர்களை மனரீதியாக துன்புறுத்தி தவறாக வழி நடத்துகிறது என்று தானே? அவர்களிடம் கேளுங்கள். இதுவரையில் இந்த தேசத்தில் அனைத்தையும் இழந்து கூட வெறுப்புணர்வு இன்றி வாழும் சமூகம் ஒன்று உண்டு . ஆனால் இன்று வரை அவர்கள் வன்முறை – அராஜகம் செய்யாதவர்கள் என்ற உண்மையை. தன் அடிப்படை உரிமையான கல்வி – வேலை வாய்ப்பு முதல் தன் வாழ்வாதாரமான வழிபாட்டு உரிமை வரை அனைத்தையும் பறித்து கொண்ட போதிலும் இதுவும் என் கர்மா என்று பொறுமையாக அனைத்தையும் கடந்து போகிறார்களே தவிர இங்கு உரிமை பறிக்கப்பட்டோம் என்று தனிநாடு கேட்கவில்லை. வெறுப்புணர்வால் துன்புறுத்தப்பட்டோம் அதற்கு பதிலடி தருகிறோம் என்று அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதம் கட்டவிழ்த்து கொத்துக் கொலைகள் நிகழ்த்தவில்லை. என்ற அவர்களது தேசிய தெய்வீக மாண்பை உரக்க சொல்லுங்கள்.
அவர்களின் அனைத்தும் பறிக்கப்பட்டு அரை நூற்றாண்டு காலம் ஆகிறது. ஆனால் அவர்கள் யாரும் தற்கொலை செய்து பிண அரசியலுக்கு கருவியாகவில்லை. ஆனால் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி உழைப்பு திறமையால் வாழ்கின்றனர். உள்நாட்டில் அகதியாக்கப்பட்டவர்கள் வாய்ப்பு தேடி உலகெங்கும் போனார்கள். இன்று உலகின் சக்தி வாய்ந்த இடம் என்று சொல்லப்படும் அமெரிக்க வெள்ளை மாளிகை – பென்டகன் – இராணுவ மையம் – நாசா விண்வெளி மையம் – பிரிட்டன் அரசமாளிகை – அரபு நாடுகளில் மிக உயர்ந்த பொறுப்புக்கள் – உச்சபட்ச ஊதியம் பெறும் முதல் 5 நபர் வரிசை என்ற எல்லா இடங்களிலும் ஒரு பிராமணர் நிச்சயம் இருப்பார்.
பிழைப்பு தேடி போன இடத்தில் கூட தகுதி – திறமை – உழைப்பு கொண்டு தானும் உயர்ந்து பக்தி -ஆன்மீகம் – கலை- இலக்கிய -கலாச்சார பங்களிப்பு என்று தன் பூர்வீக கடமை தவறாமல் வாழ்கிறார்கள். நம்பிக்கை -விசுவாசம் -அர்ப்பப்பிற்கு உரியவர்களாக இருந்தவர்களை உலகம் வாரி அணைத்து தனதாக்கிக் கொண்டது. தங்களின் நாடுகளில். குடும்ப குடிபுகல் முதல் குடியுரிமை வரை அனைத்தையும் வழங்கி அவர்களை அரவணைத்து அவர்களையும் வாழவைத்து அவர்கள் மூலம் தனது தேசத்தையும் வளப்படுத்திக் கொண்டது.
ஆனால் பார்ப்பனிய ஆதிக்கத்தை ஒழித்து சமூக நீதியை நிலைநாட்டுகிறோம் என்று அவர்களை அனைத்து துறைகளிலும் திட்டமிட்டு அப்புறப்படுத்தியவர்கள், இன்று மருத்துவ தகுதி தேர்வு நீட் எழுத முடியாது எங்களுக்கு விலக்கு வேண்டும் என்று உண்ணாவிரதத்தை அறிவிக்கிறார்கள். அணை நீர்மட்டம் பாதுகாக்க தெர்மாகோல் விட்டு ஊர் சிரிக்கிறார்கள். அரை நூற்றாண்டு கடந்த பிறகு கூட இட ஒதுக்கீடு பெற்றவன் இன்னமும் அடக்கப்பட்டோம் ஒடுக்கப்பட்டோம் என்று வன்மத்தை வளர்க்கும் திரைப்படம் வாயிலாக இன்னும் சாதி மோதலை உருவாக்கி பிரிவினை மதமாற்ற முகவராக அந்நியனுக்கு தரகு வேலை பார்க்கிறான். அவனுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டவன் இன்னமும் பார்ப்பனீய ஆதிக்கம் பாசிசம் பாயாசம் என்று முட்டுச் சந்துகளில் மேடை போட்டு சமூகநீதி பேசுகிறான்.
இவை அனைத்தையும் உலகெங்கும் இருந்தபடியே நமட்டு சிரிப்புடன் பார்க்கும் பிராமணன் நாசா விண்வெளி மையத்தில் ரகசிய குறியீட்டு மொழியாக சமஸ்கிருதத்தை வடிவமைக்ஙிறான். மறுபக்கம் கொரோனா காலத்தில் சீனாவின் விமானப்படை ஹெலிகாப்டரில் ஆகாயத்தில் பறந்தபடி உலக நன்மைக்காக சிறப்பு பூஜைகள் செய்து புனித நீரை விண்வெளியில் தெளித்து கொரோனா நோய் நீங்க பிரார்த்தனை செய்கிறான். கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே. என்பது இதுதான். தங்களின் வாழ்வாதாரம் பறித்த இந்த தேசத்தின் சமூகத்தின் மக்களின் நலன் வேண்டி நாளும் ஆலயத்தில் கருவறை சேவை செய்து இறைவனை பூஜிக்கும் மேன் மக்கள் கொண்ட சமூகம் அது . அவர்களுக்கு அநீதி இழைத்த பாவம் தான் சாபமாக மாறி இந்த மண்ணையும் மக்களையும் வாட்டி வதைக்கிறது என்று அந்த அநீதி சமன் செய்ய படாமல் இங்கு யாருக்கும் காலதேவன் நீதி வழங்க மாட்டான்.
வெளிநாடுகளில் இருந்து கல்வி – வேலை வாய்ப்பு – சுற்றுலா என்று விருந்தினராக வந்தவர்களின் நலன் பாதுகாப்பு கூட சட்டத்தின் மூலம் உறுதி செய்யும் அரசு, தன் சொந்த மண்ணின் மைந்தர்களை வஞ்சித்தது எப்படி பட்ட சமூக நீதி? தங்களின் வாக்கு வங்கி அரசியலுக்காக இதை ஆதரித்தவர்கள் எப்படிப்பட்ட மனிதர்கள்? இன்னமும் மக்களும் – அரசும் அரசு அநீதியை வேடிக்கை பார்ப்பது தான் சமூக அநீதி. இந்த அநீதி மறைந்து அனைவருக்கும் சம உரிமை வாய்ப்புகளை வழங்க வேண்டும். அதீத தகுதி – திறமை உள்ளவர்களுக்கு தேசநலன் கருதி முன்னுரிமை வழங்க வேண்டும். பின் தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு சமூக நலன் கருதி கூடுதல் பயிற்சிகள் மற்றும் சலுகைகள் – வாய்ப்புகள் வழங்க வேண்டும் . அதுவே அனைவருக்குமான சமூகநீதி .அதை செய்வதே உண்மையில் மக்கள் நலன் – தேசநலன் சார்ந்த அரசாக இருக்க முடியும்.