கேள்வி கேட்டு திணறடித்த பெண் : நைசாக நழுவி சென்ற ஸ்டாலின் !

கேள்வி கேட்டு திணறடித்த பெண் : நைசாக நழுவி சென்ற ஸ்டாலின் !

Share it if you like it

மக்களவை தேர்தல் நெருங்குவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் திமுகவினர் பிரச்சாரத்தில் செல்லும் இடமெல்லாம் அவர்களுக்கு ஏழரை சனியாகவே உள்ளது. ஒன்று கேள்வி கேட்டு மக்களே துரத்தி விடுகின்றனர் இரண்டு தவளை தன் வாயால் கெடும் என்பது போல திமுக வேட்பாளர்களே சர்ச்சையாக பேசி மாட்டி கொள்கின்றனர். சமீபத்தில் வேலூர் திமுக எம்பி கதிர் ஆனந்த் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து பேசுபொருளானது.

இந்நிலையில் திமுக வேட்பாளர்களுக்கு தான் நேரம் சரியில்லை என்றால் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் ஏழைரை சனி நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது சாலையில் வியாபாரம் செய்யும் பெண்மணி ஒருவர் ஸ்டாலினை பார்த்து, தகுதியுள்ள பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று சொன்னீங்க, நான் ரோட்டுல தான் வியாபாரம் பண்றேன், எனக்கு பணமே வரல. நானும் ரெண்டு முறை மனு குடுத்துட்டேன். ஒண்ணுமே நடக்கல. இப்படி தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார் அப்பெண்மணி. அதற்கு ஸ்டாலின் அதுக்கெல்லாம் காரணம் இருக்கும் என்று ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு அங்கிருந்து நழுவி சென்று விட்டார். இதுதொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு சாதாரண பெண்மணி கேட்டதற்கே பதில் சொல்ல தெரியவில்லை. இவரெல்லாம் தமிழகத்தின் முதல்வரா ? என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவோம் என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தது. ஆனால் தற்போது வெறும் 30 சதவீத மகளிருக்கு மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படுகிறது.

எனக்கு ஏன் ஆயிரம் ரூபாய் நீங்கள் வழங்கவில்லை என்று ஒரு சகோதரி முதல்வரை இன்று கேள்வி கேட்டுள்ளார்.

நீங்கள் இந்த கேள்வியை கேட்பதே தவறு என்று அந்த சகோதரியிடம் திரு முக ஸ்டாலின் சொல்கிறார்.

இந்த ஆணவம் திமுகவின் பிறவி குணம். தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்காக காத்திருக்கும் பொதுமக்கள் திமுகவை இந்த தேர்தலில் முழுமையாக நிராகரிக்க வேண்டும்.


Share it if you like it