நெக்ஸ்ட் ‘தி டெல்லி ஃபைல்ஸ்’… ‘ஹார்ட் பீஸ்’ தமிழகம்தானாம்?!

நெக்ஸ்ட் ‘தி டெல்லி ஃபைல்ஸ்’… ‘ஹார்ட் பீஸ்’ தமிழகம்தானாம்?!

Share it if you like it

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைத் தொடர்ந்து ‘தி டெல்லி ஃபைல்ஸ்’ படத்தை எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி. இதில் தமிழக அரசியில்தான் ஹார்ட் பீஸ் என்று தெரிவித்திருப்பதுதான் உ.பி.ஸ்களை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரியின் தயாரிப்பில் மார்ச் 11-ம் தேதி வெளியான படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. 1990-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த ஹிந்து பண்டிட் இனப்படுகொலையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் பாரத நாட்டிலுள்ள ஹிந்துக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இப்படம் வெளிவந்த பிறகுதான், காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஹிந்து பண்டிட்களுக்கு நிகழ்ந்த கொடூரம், அநியாயம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதில், ஹைலைட் என்னவென்றால், இப்படம் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

இந்த நிலையில்தான், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைத் தொடர்ந்து ‘தி டெல்லி ஃபைல்ஸ்’ படத்தை எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி. இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து விவேக் அக்னி ஹோத்ரி எதை மையாமாக வைத்து இப்படத்தை எடுக்கப்போகிறார் என்று பட்டமன்றம் நடத்தாத குறையாக விவாதித்து வருகிறார்கள் மக்கள். சிலர், 1984-ம் ஆண்டு நடந்த சீக்கிய படுகொலை பற்றியதாக இருக்கும் என்றும் ஆருடம் கூறிவருகிறார்கள். இன்னும் சிலரோ, 2020-ம் ஆண்டு டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பாக இருக்கலாம் என்று கணித்து வருகின்றனர். இப்படி பல்வேறு தரப்பினரிடையே பல்வேறு வகையான கருத்துகள் நிலவி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, இந்தப் படத்தில் தமிழக அரசியல்வாதிகள் பற்றிய காட்சிகளும் இடம் பெறும் என்று தகவல் வெளியாகி இருப்பதுதான் ஹைலைட். அதாவது, 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் நடந்த அவலங்கள் குறித்துத்தான் படத்தின் கரு இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த வகையில், தமிழக அரசியல்வாதிகளை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியுடன் அதிகமாக கூட்டணி வைத்திருந்தது தி.மு.க.தான். எனவே, தி.மு.க.வினரைப் பற்றித்தான் இருக்கும் என்பதையும் கணிக்க முடிகிறது. அந்த வகையில், காஷ்மீரில் ஹிந்து பண்டிட்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதுபோல, இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது தொடர்பான காட்சிகள் இப்படத்தில் இடம்பெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியுடன் கூட்டணி வைத்திருந்தது தி.மு.க.தான். இலங்கையில் இனப்படுகொலை அரங்கேறிக் கொண்டிருந்தபோது, மத்திய அமைச்சரவையில் தங்களது கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு எந்தெந்தத் துறை வேண்டும் என்று தி.மு.க. பேரம் பேசிய செய்திகள் செய்தித்தாள்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இலங்கை இனப்படுகொலையில் தி.மு.க.வுக்கு இருக்கும் தொடர்பு குறித்து தி டெல்லி ஃபைல்ஸ் படத்தில் காட்சிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம். அப்படி இடம்பெற்றால், தமிழ்நாட்டில் தி.மு.க.வின் கதி அதோகதிதான். இதுதான் உ.பி.ஸ்களை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது.


Share it if you like it