‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம்… கிரிக்கெட் வீரர் ரெய்னா கருத்து!

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம்… கிரிக்கெட் வீரர் ரெய்னா கருத்து!

Share it if you like it

காஷ்மீர் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கேட்டுக் கொண்டிருக்கிறார்.

1990-ம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் மிகப்பெரிய இனப்படுகொலை நடந்தது. காஷ்மீர் மாநிலத்தில் வசித்த லட்சக்கணக்கான ஹிந்து பண்டிட்கள், ஈவு இரக்கமின்றி இஸ்லாமிய அடிப்படை வாதிகளாலும், இஸ்லாமிய தீவிரவாதிகளாலும் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். உயிருக்கு பயந்து ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறி இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் தஞ்சம் புகுந்தனர். ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசு இதை கண்டும் காணாமல் இருந்து விட்டது. அதேசமயம், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளை, ஏதோ விடுதலைப் போராட்ட வீரர்களைப் போல சித்தரித்து வந்தன. இதனால், காஷ்மீரில் என்ன நடந்து என்பது இந்த பாரத தேசத்துக்கும், இந்த உலகத்துக்கும் தெரியாமலேயே போய் விட்டது.

இந்த நிலையில்தான், உண்மையில் காஷ்மீரில் நடந்தது என்ன? என்பதை விளக்கும் வகையில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் கடந்த மார்ச் 11-ம் தேதி வெளியாகி இருக்கிறது. இந்தப் படம்தான் காஷ்மீரில் நடந்தது விடுதலைப் போராட்டமல்ல, இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதுபோல, காஷ்மீரில் ஹிந்து பண்டிட்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டிருக்கிறது. இதுதான் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தை பார்த்து விட்டுத் திரும்பும் அனைவருமே கண்களில் நீர் பெருக்கெடுத்த வண்ணமே வெளியில் வருகின்றனர். மேலும், இந்தப் படம் ஒவ்வொரு ஹிந்துவும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்கிற கருத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில்தான், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை பார்த்து விட்டு, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் உங்களுக்கான படம். இப்படம் உங்களின் இதயத்தை கசக்கிப் பிழியும். ஆகவே, காஷ்மீர் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் வகையில், நீங்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குரல் கொடுத்திருக்கிறார் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் ட்விட்டர் பதிவு…

https://twitter.com/ImRaina/status/1502158523869765646?t=My7H4GbSCxX2OdRQ6sc9Ow&s=08

காஷ்மீரில் நடந்தது விடுதலைப் போராட்டம் என்று சொல்லும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ. ஆளூர் ஷானாவாஸ்…


Share it if you like it