அமர் ஜவான் ஜோதி தொடர்பாக பிரபல தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் வரலாறு தெரியாமல் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சீன நாட்டின் தீவிர ஆதரவளருமான அருணனுக்கு, ஓய்வுபெற்ற ராணுவ உயர் அதிகாரி கர்னல் தியாகராஜன் பதிலடி கொடுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நம் நாட்டுக்கு எதிராகவும், எதிரிநாடான சீனாவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துவரும் அன்னிய கைக்கூலிகளில் ஒருவர்தான் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அருணன். சமீபத்தில், சீனாவின் கோழைத்தனமான தாக்குதலால், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் 21-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இச்சம்பவத்திற்கு பாரத நாடு மட்டுமில்லாமல், உலக நாடுகளும் சீனாவிற்கு தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தன. ஆனால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், வழக்கம்போல மத்திய அரசை வசைபாடுவதிலேயே குறியாக இருந்தன.
அதேபோல, சீனாவில் இருந்துதான் கொரோனா பெருந்தொற்று பரவியது என்பது உலக நாடுகளே அறியும். அவ்வளவு ஏன், சீனாவே உணர்ந்த உண்மை இது. ஆனால், கொரோனா தொற்று இயற்கையாக பிறந்தது. அது சீனாவில் இருந்து உருவாகவில்லை என்று சீனாவிற்கு வக்காலத்து வாங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார் அன்னிய கைக்கூலியான கம்யூனிஸ்ட் கட்சியின் அருணன். இதற்கு, பாரத மக்களிடம் வசவுகளை வாங்கிக் கண்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான், தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியான தந்தி டி.வி., அமர் ஜவான் ஜோதி என்னும் தலைப்பில் ஊடக விவாதம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அருணன், அமர் ஜவான் ஜோதியின் வரலாறு தெரியாமல் கண்டபடி உளறிக் கொட்டினார். இதைத் தொடர்ந்து பேசிய ஓய்வுபெற்ற கர்னல் தியாகராஜன், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அருணனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கர்னல் தியாகராஜன் கொடுத்த பதிலடி வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.