பேரருளான் தாசர் திருக்கச்சி நம்பி!

பேரருளான் தாசர் திருக்கச்சி நம்பி!

Share it if you like it

வைசிய குலத்தில் கி.பி. 09 மாசி மிருகசீரித நட்சத்திரத்தில் சௌமிய வருஷத்தில் பிறந்த தாசர் என்ற திருநாமம் கொண்ட திருக்கச்சி நம்பிகள் அவதரித்தார். ஆளவந்தார் என்கிற மிகப்பெரிய வைணவ ஆச்சாரியருக்கு சிஷ்யராவார். நாலாயிரம் திவ்யபிரபந்தங்களை நம்மாழ்வாரிடமிருந்து பெற்ற நாதமுனியன் பேரனான ஆளவந்தார், வைணவம் தழைக்க வைக்க வந்த சிறந்த பண்டிதர். பெருமை வாய்ந்த ஆளவந்தாரின் சிஷ்யன் என்ற பெருமை சாதாரண வைஷ்ய குலத்தில் பிறந்த திருக்கச்சி நம்பிக்கு கிட்டியது ஒரு பேரு.

ஆளவந்தார் இவருக்கு அளித்த பெயர் “பேரருளான் தாசர்” என்பது. கச்சி (காஞ்சிபுரம்) வாழ்ந்தமையால் திருக்கச்சி என்ற நாமம் வந்தது.  காஞ்சிமுனி, காஞ்சி பூர்ணர் என்ற பெயரிலும் இவர் அழைக்கப்பட்டார். பூந்தமல்லியில் அவதரித்த இவர், தனது பூர்வீகமான வியாபாரங்களை எல்லாம் காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு பூக்கைங்கர்யம் செய்து செலவிட்டார். தினசரி பூந்தமல்லியிலிருந்து நடந்து காஞ்சிபுரம் சென்று பேரருளாளன் என்ற நாமம் பெற்ற பக்தர்களுக்கு பேரருள் புரியும் காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு தனது நந்தவனத்திலிருந்து பூ கட்டி எடுத்துச் செல்வது வழக்கம். இவர் செய்த கைங்கர்யத்திற்கு பெருமாள் இவருடன் பேசுவார். இவர் பெருமாளுக்கு விசிறி வீசுவார். எம்பெருமான் ஆனந்தமான அனுபவிப்பார். இதே கைங்கர்யத்தை அவர் திருவேங்கடமுடையானுக்கும் செய்த சமயத்தில் அந்தப் பெருமான் போதும் எனக்கு, இங்கு வெப்பமாக உள்ள காஞ்சிபுரம் சென்று எனக்கு இதே விசிறி கைங்கர்யம் செய், என்று திருப்பி அனுப்பிய சம்பவம் இவர் வாழ்க்கையில் நடந்தது ஒரு பெரும் பேரு.

விசிஷ்டாத்வைதம் என்ற அற்புதமான சித்தாந்தத்தை உலகிற்கு அருளியும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கட்டி காத்து வந்த வைணவத்தை நாடு முழுவதும் கொண்டு செல்வதற்காக அவதரித்த எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜர் திருக்கச்சி நம்பியின் சிஷ்யராக விரும்பியது, இவர் வாழ்க்கையில் முக்கியமான தருணமாகும். இவர் தனது குலத்தை காண்பித்து இராமானுஜருக்கு குருவாக முடியாது என்று அடக்கத்துடன் அருளினார். குறைந்தபட்சம் திருக்கச்சி நம்பி உண்ட உணவையாவது தான் உண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆதிசேஷண், லஷ்மணன் அவதாரமாகிய ஸ்ரீ ராமானுஜரே திருக்கச்சி நம்பி மீது அளவு கடந்த மரியாதை, தனது குருவாக எண்ணியது மிக்க சிறப்பு.  திருக்கச்சி நம்பியை உணவுண்ண அழைத்த சமயத்தில் ராமானுஜர் தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார்.

மிகுந்த ஆசார சிந்தனையுடைய ராமானுஜரின் மனைவி, நம்பி உண்ட இடத்தை ராமானுஜர் வருவதற்குள் வீட்டை சுத்தம் செய்து புதிய உணவு சமைத்து நம்பியை அவமானம் செய்த செயலை கண்டு, ராமானுஜர் சன்னியாசம் பெற்றார். பகவத் ராமானுஜர் சன்னியாசம் பெற்று மேலும் மேலும் நமது தர்மத்திற்கு கைங்கர்யம் செய்ய காரணமாக இருந்தவர் நம்பி. ராமானுஜருக்கு மிகுந்த குழப்பம் ஏற்பட்டது, திருக்கச்சி நம்பியிடம் காஞ்சி பேரருளாளன் வரதராஜனிடம் தன்னுடைய சந்தேகங்களை தீர்த்து வைக்குமாறு வேண்டினார். நம்பி பெருமாளிடம் பேசி ஆறு கட்டளைகளை ராமானுஜருக்காக பெற்றார். ராமானுஜரின் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தவர் திருக்கச்சி நம்பி.

வைணவத்திற்கு குல, கோத்திரம் என்ற வேறுபாடு கிடையாது. எம்பெருமானே உபாயம், அபயம். அவன் திருவடிகளே சரணம் என்று பக்தி மார்க்கத்தில் திளைத்து அடியார்களுக்கு கைங்கர்யம் செய்து மோக்ஷ பிராப்தி அடைபவர்கள். அவ்வாறு பேறு அடைபவர்கள் அந்தர்யாத்மாவாக எல்லோரிடத்திலும் இருக்கிறார் என்பது ஸ்ரீவைஷ்ணவர்களின் நம்பிக்கை. எல்லாவற்றையும் படைத்து அதனுள் நீக்கமற நிறைந்திருப்பவன் ஸ்ரீமன் நாராயணன் என்கிற பரிபூரணமான சிந்தனையில் உள்ள வைணவர்கள் சாதி, மொழி நாடு பேதமில்லாது எல்லோரையும் அரவணைப்பவர்கள். அந்த வரிசையில் நாம் திருக்கச்சி நம்பியைப் பற்றி பார்த்தோம்.


Share it if you like it