சனாதன தர்மத்தின் வழிபாட்டு முறைகளில் முக்தி என்னும் மோட்சம் வழங்கும் வைகுண்ட ஏகாதசி வழிபாட்டிற்கு எப்போதும் முக்கியத்துவம் உண்டு. அதில் வைணவ தலங்களில் ஏகாதசி நாளில் தரிசனம் செய்வதும் ஆண்டுக்கு ஒரு முறை வரும் மஹா ஏகாதசியான மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி திருநாளில் பாடல் பெற்ற தலங்களை அல்லது முக்தி தலங்களிலோ தரிசனம் செய்து வழிபடுவதும் தவறாது முக்தியை வழங்கும் என்பது சனாதன நியதி. இதில் சப்த முத்தி தலங்களுக்கு அடுத்தபடியாக பெரும் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களாக வழங்கப்படுவது தென் இந்திய அளவில் பூலோக வைகுண்டம் என்னும் முதலாவது திவ்ய ஸ்தலமும் பழமையான வைஷ்ணவ தளபமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயம் . இந்த ஸ்ரீரங்கம் ஆலயத்திற்கு அடுத்தபடியாக ஒட்டுமொத்த வைணவ பக்தர்கள் ஆன்மிக அடியார்களின் சொர்க்கவாசல் தரிசன வரிசையில் இருப்பது ஆந்திர மாநிலத்தில் இருக்கும் திருமலை திருப்பதி ஏழுமலையான் சன்னிதியில் சொர்க்கவாசல் நிகழ்வு தான் .
நாராயணனின் திவ்ய தேசங்களிலும் பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் வழிபாட்டிலும் பக்தர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவது ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதியில் அமர்ந்திருக்கும் ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்காகத்தான். ஆண்டுதோறும் இந்த தரிசனத்திற்காக தவம் இருந்து வரும் பக்தர்கள் உலகம் முழுவதிலும் ஏராளம் உண்டு . கடந்த பல ஆண்டுகளாக பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரிப்பு ஆலய நிர்வாக விஸ்தரிப்பு காரணமாக பரமபத வாசல் தரிசனம் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப நேரம் நீட்டிப்பு கூடுதல் ஏற்பாடுகள் என்று பல்வேறு பக்த ஜனக்கோடி ஆதரவு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா கால முடக்கம் .அதன் காரணமான மக்களின் அச்சம் காரணமாக சொர்க்க வாசல் தரிசனம் களையிழந்தது. பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் வியாபார தளங்கள் பொழுதுபோக்கு தளங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு விதிக்கப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக திருமலை திருப்பதியின் வைகுண்ட ஏகாதசி கொண்டாட்டமும் சொர்க்கவாசல் திறப்பு நடவடிக்கையும் ஒரு ஆண்டு முழுமையாக ரத்து செய்யப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகள் ஆலய சம்பிரதாய அடிப்படையில் நடந்தேறியது. இதன் காரணமாக உலகெங்கும் உள்ள பக்தர்களிடம் மனக்குறை ஏற்பட்டது .
கொரோனா அபாயம் நீங்கி. ஆலயத்தில் மீண்டும் உற்சவங்கள் களைக்கட்டும் காரணமாக இந்த ஆண்டு திருமுறை திருப்பதியின் சொர்க்கவாசல் நிகழ்ச்சி விமர்சையாக முன்னெடுக்க திருமலை தேவஸ்தானம் முடிவெடுத்திருக்கிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு நடக்க இருக்கும் திருமலை திருப்பதியின் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு பத்து தினங்கள் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டு உலகம் முழுவதும் உள்ள சொர்க்கவாசல் தரிசன அடியார்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மனம் குளிர வைத்திருக்கிறது.
ஏற்கனவே திருமலை திருப்பதியில் மலை மீது பக்தர்களுக்கு உணவுக்கு செலவில்லாமல் எல்லா இடங்களிலும் அன்ன பிரசாதம் வழங்குவது உள்ளிட்ட கூடுதலாக பல சிறப்பு நடவடிக்கைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. சீதோஷ்ண சவால்களை எல்லாம் கடந்து திருமலை திருப்பதியின் மலை மேலும் கீழ் திருப்பதியிலும் பக்தர்கள் நடைபாதையாக தரிசனம் செய்வதிலும் அங்கேயே தங்கி தொடர் தரிசனம் மற்றும் அருகில் உள்ள ஆன்மீக தலங்கள் தரிசனம் செய்வதற்கும் தேவையான அடிப்படை ஏற்பாடுகளையும் உள் கட்டமைப்புகள் போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளையும் வெகு சிரத்தையாக செய்து வருகிறது.
இதில் குறைந்த செலவில் பாதுகாப்புடன் கூடிய தங்குமிடங்கள் இலகுவான போக்குவரத்து வசதி சுகாதாரம் மருத்துவம் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் குறைந்த கட்டணத்தில் அல்லது அன்னப்பிரசாத பங்களிப்பில் ஆரோக்கியமான சுத்தமான சைவ உணவுகள் என்று திருமலை திருப்பதிக்கு படையெடுக்கும் ஒவ்வொரு அடியாரின் நலன் பாதுகாப்பு அவர்களின் மகிழ்ச்சியான தரிசனம் அதன் மூலமாக ஆத்ம திருப்தியை மனதில் வைத்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் சீரிய சேவை வழங்கி வருகிறது. தற்போது மார்கழி மாதம் வரை இருக்கும் வைகுண்ட ஏகாதசி விழாவை பக்தர்கள் மனம் மகிழும் படி விமரிசையாக நடத்துவதற்கு தயாராகிறது . இதன்படி கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளும் சம்பிரதாய அடிப்படையிலேயே நடந்தேறிய திருமலை திருப்பதியின் சொர்க்கவாசல் தரிசனம் இந்த ஆண்டு சர்வதேச ஆன்மீக திருவிழாவாக வழக்கம் போல முன்னெடுக்க தேவஸ்தானம் தயாராகிறது. எதிர்வரும் டிசம்பர் 23 – 2023 அன்று வைகுண்ட ஏகாதசிக்கான சொர்க்கவாசல் திறப்பு தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது.
நிகழும் மங்கலமான ஸ்ரீ சோபக்ருது வருடத்தின் வைகுந்த ஏகாதசி திருநாள் வரும் மார்கழி மாதம் 8 ம் நாளில் வருகிறது. வைகுண்ட ஏகாதசி நன்னாளில் பிரம்ம முகூர்த்த வேலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வோடு தொடரும் இந்த விழா உற்சவம் அடுத்து வரும் 10 நாட்கள் முழுமையாக பக்தர்கள் தரிசனத்திற்காக விஸ்தரிக்கப்படும். இதன் மூலம் டிசம்பர் 23 முதல் 2024 ஜனவரி ஒன்று முடிய முழுமையாக பத்து நாட்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் சொர்க்கவாசல் திறப்பு தரிசனம் பக்தர்களுக்காக நீட்டிக்கப்படுகிறது. இதற்கு முன்கூட்டியே சிறப்பு தரிசன டிக்கெட் பதிவு செய்து போவது கட்டாயம். இதற்கான சொர்க்கவாசல் பிரவேசத்திற்கு தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட் இம்மாதம் பத்தாம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட்டு விற்பனைக்கு தயாராகும் என்ற அறிவிப்பும் வெளியாகிறது.
வைகுண்ட தரிசனம் என்ற பெயரில் 300 ரூபாய் சிறப்பு நுழைவு கட்டணம் ஆண்டு முழுவதும் வழக்கில் இருப்பதும் விரைவு தரிசனம் பெறுவதும் பக்தர்களுக்கு இலகுவாக இருந்து வந்தது. அளவு கடந்த கூட்டம் அசாதாரண சூழல் அல்லது முக்கியமான விழா உற்சவ தினங்களில் இந்த சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுவதும் உண்டு. ஆனால் வைகுண்ட ஏகாதசி நாள் அதை தொடர்ந்து வரும் பத்து நாள் விழாவை முன்னிட்டு இந்த வைகுண்டம் தரிசனமும் அதற்கான சிறப்பு நுழைவு டிக்கெட் விற்பனையும் ஆன்லைன் மூலமாகவே உலகெங்கும் உள்ளம் பக்தர்களுக்கு விநியோகிக்க திருமறை திருப்பதி தேவஸ்தானம் தயாராகிறது.
இதன் மூலம் முன்கூட்டியே சொர்க்கவாசல் தரிசனத்திற்கான நுழைவு தரிசன டிக்கெட் பெற்றுக் கொள்வதன் மூலம் தங்களின் தரிசனம் தரிசனத்திற்கான அனுமதி நேரம் உள்ளிட்டவற்றை உறுதி செய்து கொள்ள பக்தர்களுக்கு உதவியாக இருக்கும். அதற்கு தேவையான வகையில் பிரயாணத்திட்டம் தங்கும் ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்வதன் மூலம் விழா காலங்களில் ஏற்படும் அசௌகரியங்கள் இடர்பாடுகள் அலைக்கழிப்புகளை பக்தர்கள் தவிர்க்க முடியும். இதை எல்லாம் மனதில் வைத்து தான் திருமலை திருப்பதி தேவஸ்தானம் முன்கூட்டியே சொர்க்கவாசல் வீட்டிற்க்கு காண அறிவிப்பையும் அதன் நுழைவு தரிசன டிக்கெட் விற்பனைக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.