ராகுலைத் தொடர்ந்து திருமாவளவனும் தகுதி இழப்பு செய்யப்படலாம் என்கிற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
ஹிந்துக்கள், ஹிந்துக் கடவுள்கள், ஹிந்து தர்மம் உள்ளிட்டவைகளை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வருபவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். அதேபோல, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். எல்லாவற்றும் மேலாக ஹிந்து உயர் ஜாதி பெண்களை பற்றி திருமாவளவன் பேசியது இழிவுகளின் உச்சம். இந்த சூழலில்தான், மோடி சமூகம் பற்றி இழிவாகப் பேசிய ராகுல்காந்திக்கு, குஜராத் மாநிலத்திலுள்ள சூரத் நீதிமன்றம், 2 ஆண்டுகள் தண்டனை விதித்தது. இதனால், ராகுலின் எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டு, அரசு பங்களாவையும் காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் திருமாவளவன், ராகுல் காந்திக்கு தீர்ப்பளித்தது ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த நீதிபதி என்று கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது மட்டும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் திருமாவளவன் மீது அவதூறு வழக்கு மட்டுமல்ல, நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர் அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதன் மூலம் ராகுலுக்கு விதிக்கப்பட்டதுபோல, திருமாவளவனுக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்கும். இதனால், திருமாவின் எம்.பி. பதவியும் பறிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இது ஒருபுறம் இருக்க, ஹிந்துக்கள், ஹிந்து கோயில்கள், ஹிந்து கடவுள்கள் குறித்து ஏற்கெனவே திருமாவளவன் பேசிய வீடியோ காட்சிகளை எல்லாம் ஹிந்து அமைப்பினர் திரட்டி வருகிறார்களாம். காரணம், இதை எல்லாம் கோர்ட்டில் சமர்ப்பித்து, திருமா மீது அவதூறு வழக்குத் தொடரப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த விஷயம் எப்படியோ திருமாவுக்கு தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், எனக்கு பா.ஜ.க.வினருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும், பகையும் கிடையாது. ஹிந்துத்துவா சித்தாந்தத்தைத்தான் வெறுக்கிறேன் என்று அந்தர்பல்டி அடித்திருக்கிறார். எனினும், திருமா மீது வழக்குத் தொடர்வதில் ஹிந்து அமைப்புகள் உறுதியாக இருக்கின்றனவாம்.