முழுமையான விடுதலை சிறுத்தையாக இருக்க வேண்டுமானால் உன் மீது குறைந்தது 10 வழக்காவது பதிவு ஆக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் திருமாவளவன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவர், அடங்கமறு, அத்துமீறு, திமிரி எழு என பேச கூடியவர். நல்ல தலைவராக இருக்க வேண்டிய திருமா அப்பாவி பட்டியல் சமூக மக்களின் உள்ளங்களில் விஷயத்தை திணித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு. விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் சுயமரியாதைகாரர்கள், தன்மானம் மிக்கவர்கள் என்று பேசுவார். அதேவேளையில், தி.மு.க.விடம் அசிங்கப்படுவதையும், அவமதிக்கப்படுவதையும் கண்டும் காணாமல் கடந்து விடுவார்.
இதனிடையே, கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தனது கட்சி தொண்டர்களிடம் காணொளி வாயிலாக உரையாடும் போது இவ்வாறு பேசினார்;
தி.மு.க. கூட்டணி கட்சியை சேர்ந்த தோழர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புகைப்படத்தையோ, கொடியையோ, புறக்கணித்தால் விடுதலை சிறுத்தைகளின் அடையாளம் மறைந்து விடாது எனவே தொண்டர்கள் யாரும் வருதப்பட வேண்டாம் என தனது தொண்டர்களுக்கு வேதனையுடன் அறிவுரை வழங்கியிருந்தார். மானம், ரோஷம், பார்த்தால் அரசியல் சக்தியாக வளர முடியாது என்று முன்பு ஒருமுறை இதே திருமா தனது கட்சி தொண்டர்களுக்கு அறிவுரையை வழங்கி இருந்தார்.
தெளிவற்ற சிந்தனை, குழப்பமான மனநிலையில் இருக்கும் இவர் சிறந்த தலைவராக இருக்க முடியாது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தான், முழுமையான விடுதலை சிறுத்தையாக இருக்க வேண்டுமானால் உன் மீது குறைந்தது 10 வழக்காவது பதிவு ஆக வேண்டும் என்று திருமாவளவன் பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.