தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் காணொளியை திரித்து வெளியிட்ட வி.சி.க. தலைவர் திருமாவளவனை நெட்டிசன்கள் மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி விடுதலை சிறுத்தைகள். இந்த, கட்சியின் தலைவர் திருமாவளவன். இவர், விடியல் ஆட்சியில் நடைபெறும் அட்டூழியங்களையும், அடாவடிகளையும், கண்டும் காணாமல் கடந்து செல்வதை வழக்கமாக கொண்டவர். அந்தவகையில், உண்மைக்கு புறம்பாகவும் அவதூறாக பேசுவதை தனது முழுநேர தொழிலாக கொண்டவர்.
அதேபோல, விடியல் ஆட்சியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், இதுகுறித்து வாய் திறக்காமல் தொடர்ந்து கள்ளமெளனமாக இருந்து வருகிறார். இப்படியாக, திருமாவளவனின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பிரபு-28. இவர், ராணுவ வீரராக பணியாற்றியவர். இவரை தான், தி.மு.க. கவுன்சிலர் சின்னசாமி மற்றும் அவரது அடியாட்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடித்து கொலை செய்தனர். இச்சம்பவம், இன்றுவரை இந்தியா முழுவதும் பேசுப்பொருளாக இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்து, ராணுவ வீரர் பிரபுவின் படுகொலைக்கு நியாயம் கேட்டு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசும் போது, நொறுங்கி போய் இருக்கும் தமிழக ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இதன், முழு காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.
இந்த காணொளியின் உண்மை தன்மை என்னவென்று அறியாமல், வி.சி.க. தலைவர் திருமாவளவன் அவதூறு பரப்பும் நோக்கில் அதனை எடிட் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, நெட்டிசன்கள் அவரை ஊறுகாய் போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.எஸ்.டி. என்றால் என்னவென்று அறியாத திருமாவிற்கு ஏன்? இந்த வேலை என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.