பட்டியல் சமூகத்தை அவமதித்த நபருக்கு ஆதரவு: திருமாவிற்கு குவியும் கண்டனம்!

பட்டியல் சமூகத்தை அவமதித்த நபருக்கு ஆதரவு: திருமாவிற்கு குவியும் கண்டனம்!

Share it if you like it

பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் பிரபல இசையமைப்பாளர் இளைய ராஜா. இவரை, இழிவுப்படுத்திய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்குதான் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் எதிர்வரும் பிப்-27 – ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த ஆபாச பேச்சாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களம் இறங்கி இருக்கிறார். இவரை, வேட்பாளராக நிறுத்தி இருப்பதற்கு அக்கட்சியை சேர்ந்த பலர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு, வி.சி.க. தலைவர் திருமாவளவன் தனது ஆதரவினை வழங்கியிருக்கிறார். இதுதான், வி.சி.க. தொண்டர்களையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதே, இளங்கோவன் தான் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பட்டியல் சமூகத்தின் ஒரே தலைவர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திருமாவளவன் எப்படி? ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரிக்க மனம் வந்தது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it