பஞ்சமி நிலம் மீட்பு குறித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ள கருத்தை வி.சி.க. தலைவர் திருமாவளவன் வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்றைய தினம் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த, விழாவில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார் ;
கிருஷ்ணகிரி மாவட்டம் அருணபதி கிராமத்தில் நடைபெற்ற ஆணவ கொலையில் இரண்டு பேர் உயிரிழந்தனர். தாய் மற்றும் மகன் உறங்கும்போதே கொல்லக் கூடிய அளவுக்கு சாதி மனிதர்களை ஆட்டிப்படைக்கிறது. இந்த சம்பவத்தில் அனுசுயா என்னும் தலித் பெண் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆணவ கொலையை கண்டித்தும், ஆணவ கொலை தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் 22-ம் தேதி கிருஷ்ணகிரியில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். பஞ்சமி நிலம் மீட்பு குறித்து வானதி சீனிவாசன் கோரிக்கை எழுப்பி இருப்பதை வரவேற்கிறோம்.