ஜனாதிபதி திரெளபதி முர்மு இழிவுப்படுத்தும் நோக்கில் கருத்து தெரிவித்த திருமாவிற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவர், பா.ஜ.க பாரதப் பிரதமர் மோடி மற்றும் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதையே நோக்கமாக கொண்டவர். இதுதவிர, ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்களை தொடர்ந்து கொச்சையாக விமர்சனம் செய்ய கூடியவர். அந்த வகையில், வழக்கத்தில் இல்லாத மனுநீதி புத்தகத்தை மேற்கோள் காட்டி ஹிந்து பெண்களையும், ஹிந்து தர்மத்தையும் அண்மையில் மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
இப்படியாக, இவரது பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்கள் மலிவாக இருந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், இந்திய முதல் குடிமகவாக உயர்ந்துள்ள அவர்களுக்கு எமது வாழ்த்துகள். மகா பாரதத்தில் நாட்டைச் சூதாட்டத்தில் விட்டவர்கள் திரௌபதியையும் விட்டார்கள். நவ பாரதத்தில் நாட்டைக் கார்ப்பரேட்டுகளிடம் விற்பவர்கள் மகா பாரத பாண்டவர்களின் வாரிசுகளாம். ஏமாறக் கூடாது நவ திரௌபதி என தனது ட்விட்டரில் பதிவு செய்து இருக்கிறார்.
வரலாறு தெரியாமல் வழக்கம் போல தொடர்ந்து உளறி வரும் திருமா, தற்போது நாட்டின் மிக உயரிய பொறுப்பில் இருக்கும் ஜனாதிபதியை இழிவுப்படுத்தும் நோக்கில் கருத்து தெரிவித்து இருக்கிறார். பட்டியல் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் பா.ஜ.க.வின் பக்கம் தங்களது கவனத்தை திசை திருப்பி வருகின்றனர். இதனை, பொறுத்துக் கொள்ள முடியாமல் அரசியல் அனாதை போல திருமா கதறி வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.