எதுக்கு உங்களுக்கு தனிக்கட்சி? திருமாவை சிதைத்த சிறுத்தைகள்!

எதுக்கு உங்களுக்கு தனிக்கட்சி? திருமாவை சிதைத்த சிறுத்தைகள்!

Share it if you like it

பட்டியல் சமுதாய மக்களுக்காக தனிக்கட்சி தொடங்கி விட்டு, தனியாக செயல்படாமல் கூட்டணி வைப்பது ஏன்? அப்படிப்பட்ட உங்களுக்கு தனிக்கட்சி எதற்கு என்று திருமாவளவனிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கேள்வி கேட்டு திணறடித்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

1982-ம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார் திருமாவளவன். ஆனால், கட்சி தொடங்கியதில் இருந்தே அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே தேர்தலை சந்தித்து வருகிறார். இதுவரை தனித்து நின்றதாக வரலாறு கிடையாது. இந்த சூழலில், திருமாவளவனிடம் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருக்கிறது தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று. இந்நிகழ்ச்சியில், கட்சியின் தொண்டர்கள் கேட்கும் கேள்விக்கு திருமாவளவன் காணொளி வாயிலாக பதிலளிக்கும் வகையில் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திருமாவளனிடம் எக்குத்தப்பாக கேள்வி கேட்டு திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஒரு இளம் சிறுத்தை, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கட்சி ஆரம்பித்து விட்டு, ஏதாவது ஒரு திராவிடக் கட்சியுடன் கூட்டணி அமைத்து, பலனை பெற்றுக் கொள்கிறீர்கள். இதற்கு எதற்கு உங்களுக்கு தனிக்கட்சி. அக்கட்சியிலேயே சேர்ந்து பலனை அனுபவித்துக் கொள்ள வேண்டியதுதானே என்று கேள்வி எழுப்பினார். இக்கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திருமாவளவன் திணறியது அப்பட்டமாகத் தெரிந்தது.

அதேபோல, இன்னொரு இளம் சிறுத்தை, நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை முன்னிறுத்தி அரசியல் நடத்துகிறீர்கள். அப்படி இருக்க, இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த கட்சியுடன், 1 சீட்டு, 2 சீட்டுக்காக கூட்டணி வைக்கிறீர்களே, உங்கள் மனச்சாட்சி உறுத்தவில்லையா? என்று கேள்வி எழுப்பினார். இக்கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் தவித்த திருமாவளவனின் முகம் வெளிறிப்போனதை காணமுடிந்தது. இந்நிகழ்ச்சி எப்போது நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it