நீ ஆம்பளையா இருந்தா: தனிநாடு கேட்டு தெருவுக்கு வா பார்ப்போம்… ராணுவ வீரர் மிரட்டல் காணொளி!

நீ ஆம்பளையா இருந்தா: தனிநாடு கேட்டு தெருவுக்கு வா பார்ப்போம்… ராணுவ வீரர் மிரட்டல் காணொளி!

Share it if you like it

வி.சி.க. தலைவருக்கு ராணுவ வீரர் கடும் எச்சரிக்கை விடுத்து இருக்கும் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இவர், தேர்தலில் வெற்றி பெறும் வரை ஹிந்து ஆலயங்களுக்கு செல்வதும், ஹிந்துக்களை புகழ்ந்து பேசுவதையும் வாடிக்கையாக கொண்டவர். தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு அதே மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதை தனது முழு நேர தொழிலாக செய்பவர். அதேபோல, தேசத்திற்கு எதிராக தொடர்ந்து பிரிவினை கருத்துக்களை முன்வைக்க கூடியவர். அந்த வகையில், தமிழகத்தை தனி நாடாக மாற்ற வேண்டும் என இவர் பேசிய காணொளி அண்மையில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் திருமாவின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இவ்வாறு பேசியிருக்கிறார் ;

தமிழ் நாடு கேட்கும் திருமாவளனுக்கு எனது கேள்வி இதுதான். தமிழகத்தில், தனியா நின்று ஒரு வார்டில் உங்களால் வெற்றி பெற முடியுமா? உன்னால், ஒரு வார்ட்டினை சொந்தமாக மாற்ற முடியுமா? ஒரு நாடு மாதிரி தமிழகத்தை சொந்தமாக மாற்ற முயற்சி செய்கிறீர்கள். தனி தமிழ்நாடு வேண்டும் என கேட்டு கொண்டு இருக்கிறீர்கள். இதற்குதான், நாங்கள் இந்திய ஒருமை பாட்டையும், தேச பக்தியையும் வளர்க்க வேண்டி ராணுவத்தில் சேர்ந்தோமா. நாட்டை இரண்டாகவும், மூன்றாகவும் பிளக்க தானா? இருக்கும் நாட்டை ஒன்று சேர்க்கதான் நாங்கள் ராணுவத்தில் சேர்ந்து இருக்கிறோமே? தவிர நாட்டை பிரித்து பார்க்க அல்ல. உன் சுயநலத்திற்காக ஒரு தனிநாடு கேட்பாய்.

அதன்பிறகு, மாவட்டத்தை பிரித்து கொடு என்று கேட்பாய். என்ன தைரியத்தில் தமிழகத்தை தனிநாடாக மாற்ற வேண்டும். உன்னை இவ்வளவு தூரம் பேச வைத்த ஆட்சியாளரின் தவறு. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எது வேண்டுமானாலும் பேசுவீங்களா? நாட்டு பற்றை வளர்க்க போராடி கொண்டு இருக்கும் நாங்கள் என்ன இழிச்சவாயன்களா? நீ ஆம்பளையா இருந்தா ஒரு நாள் வீதியில் நின்று தனி தமிழ்நாடு வேண்டும் என்று போராடி பாரு உன் வாயாலேயே வந்த மாதரம் என்று சொல்ல வைப்போம் என திருமாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியிருக்கிறார்.

ராணுவ வீரர் பேசிய வீடியோ இதோ.


Share it if you like it