நெல்லையப்பர் கோயிலுக்குள் பர்தா அணிந்து சென்ற 3 பேர் யார்?!

நெல்லையப்பர் கோயிலுக்குள் பர்தா அணிந்து சென்ற 3 பேர் யார்?!

Share it if you like it

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்குள் 3 பேர் பர்தா அணிந்து சென்ற விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. மேலும், பர்தா அணிந்து சென்றது பெண்களா அல்லது ஆண்கள் உளவு பார்ப்பதற்காக பெண்களைப் போல பர்தா அணிந்து வந்தார்களா என்கிற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது.

திருநெல்வேலியில் பிரபலமான நெல்லையப்பர் கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலில் தைப்பூச தினமான நேற்று காலை 11:15 மணியளவில் பர்தா உடையணிந்து 3 பெண்கள் நுழைந்திருக்கிறார்கள். நெல்லையப்பர் கோயில் முழுவதைுயம் சுற்றி வந்த இவர்கள், நெல்லையப்பர் மற்றும் அம்மன் சன்னதிகளில் வழிபாட்டிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும், குறிப்பிட்ட சில இடங்களை அவர்கள் செல்போன் மூலம் போட்டோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதான் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

அதாவது, கோயிலுக்குள் பக்தர்கள் செல்லும்போது உடை அணிவதில் சில விதிமுறைகள் உள்ளன. அப்படி இருக்க, பர்தா அணிந்து சென்ற 3 பெண்களை உளவுப் பிரிவு போலீஸாரோ, கோயில் ஊழியர்களோ கண்டுகொள்ளவில்லை. அதோடு, பர்தா அணிந்து சென்றது உண்மையிலேயே பெண்கள்தானா அல்லது ஆண்கள் பர்தா அணிந்து பெண்களைப் போல கோயிலுக்குள் நுழைந்து உளவு பார்த்தார்களா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. அதோடு, இவர்கள் கையில் என்ன கொண்டு வந்தார்கள், கோயிலுக்குள் எதையேனும் வைத்து விட்டுச் சென்றார்களா? என்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

இந்த நிலையில், இதுகுறித்து ஹிந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் கோயில் அலுவலகத்தில் புகார் செய்திருக்கிறார். இதையடுத்து, கோயிலில் இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, கோயிலுக்குள் பர்தா அணிந்து வந்த சம்பவத்தை கண்டித்து கோயில் முன்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஹிந்து முன்னணியினர் அறிவித்திருக்கிறார்கள்.


Share it if you like it