திருவண்ணாமலை மாவட்டம் அருகில் உள்ள இளையாங்கன்னி மலை மீது சிலுவை நட்டு, அதன் பின்பு முழு மலையையும் ஆக்கிரமிக்க முயன்ற கிறிஸ்தவ மிஷநரிகள். சர்ச் கட்டியுள்ளது, வருவாய்த்துறையினர் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஹிந்துக்கள் இருக்கும் இடங்களை குறி வைத்து கிறிஸ்தவ மிஷநரிகள் தமிழகத்தில் மிக தீவிரமாக மதமாற்றும் தொழிலை சீறும், சிறப்புமாக இன்று வரை செய்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. எஸ்றா சற்குணம், மோகன் சி லாசரஸ், போன்றவர்கள் ஹிந்து மதத்திற்கு எதிராகவும், ஹிந்து மதத்தை இழித்தும், பழித்தும், பேசி வருவது ஒருபுறம் என்றால், விடியல் ஆட்சியில் தொடர்ந்து ஹிந்து ஆலயங்கள் இடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் அருகில் உள்ள இளையாங்கன்னி பகுதியில் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, கார்மேல் மலை மாதா கோவில் உள்ளது. இது வேலூர் மறை மாவட்ட கட்டுப்பாட்டின் கீழ் இன்று வரை செயல்பட்டு வருகிறது. இளையாங்கன்னி பகுதியில் 4,500க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர் பெரும்பாலான மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டதாக கூறப்படுகிறது.
கார்மேல் மலை மாதா சர்ச் கட்டப்பட்டு உள்ள இடங்களை சுற்றி கிறிஸ்தவ மிஷநரிகள் ஆக்கிரமிப்பு செய்த சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. அரசு ஆவணத்தில் இந்த இடம் கல்லாங்குத்து என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் யாருக்கும் அரசு பட்டா வழங்கப்படாத நிலையில் மக்களை முன் நிறுத்தி கிறிஸ்தவ மிஷநரிகளின் சர்ச் நிர்வாகம் மலையை ஆக்கிரமிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.