மீன் பிடிக்க ரூ.25 லட்சம் லஞ்சம்: மறுத்த மீனவர் படகுகள் வலை சேதம்… குடிசை எரிப்பு; தி.மலை தி.மு.க. அராஜகம்!

மீன் பிடிக்க ரூ.25 லட்சம் லஞ்சம்: மறுத்த மீனவர் படகுகள் வலை சேதம்… குடிசை எரிப்பு; தி.மலை தி.மு.க. அராஜகம்!

Share it if you like it

திருவண்ணாமலையில் எம்.எல்.ஏ. கிரியின் பெயரைச் சொல்லி மீன் பிடிக்க 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில், தர மறுத்த மீனவர்களின் படகுகள், வலைகளை தீயிட்டு எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா ஜவ்வாதுமலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது குப்பநத்தம் அணை. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த அணையில் உள்நாட்டு பங்கு மீனவர் மகளிர் குழுவினர் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், தி.மு.க. மாவட்ட பிரதிநிதியும், கல்லாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் சிவானந்தம் என்பவர், மீன் பிடிப்பதற்கு 25 லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று மீனவர் குழுவினரிடம் செங்கம் எம்.எல்.ஏ. கிரி பெயரை பயன்படுத்தி பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். ஆனால், மீனவ மகளிர் குழுவினர் பணம் தர மறுத்து விட்டனர். இதுகுறித்து எம்.எல்.ஏ.விடம் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், கடந்த வாரம் குப்பநத்தம் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தனது ஆதரவாளர்களுடன் சென்றிருக்கிறார் எம்.எல்.ஏ. கிரி. அப்போது, மீனவர்களின் படகுகள், வலைகளை சேதப்படுத்திய எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள், மீனவர்கள் அமைந்திருந்த குடிசைக்கும் தீவைத்திருக்கிறார்கள். இதுகுறித்து செங்கம் காவல் நிலையத்தில் மீனவர் மகளிர் குழுவினர் புகார் அளித்த நிலையில், புகாரை வாங்க போலீஸார் மறுத்து விட்டார்களாம். மேலும், போலீஸாரும், வருவாய்த்துறையினரும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல், தி.மு.க. எம்.எல்.ஏ. கிரிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்களாம். இதனால் மீனவ மகளிர் குழுவினர் செய்வதறியாத திகைப்போய் இருக்கிறார்கள்.


Share it if you like it