தூள் தூளாக உதிரும் கான்கிரீட் தூண்… உங்க அட்டகாசத்துக்கு அளவே இல்லையாடாப்பா?!

தூள் தூளாக உதிரும் கான்கிரீட் தூண்… உங்க அட்டகாசத்துக்கு அளவே இல்லையாடாப்பா?!

Share it if you like it

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காலை உணவு திட்டத்திற்காக கட்டிய புதிய சமையல் கூடத்தின் கான்கிரீட் தூண்கள், லேசாக கையால் ஆட்டினாலே தூள் தூளாக உதிரும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகேயுள்ள கிடாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது ஐயப்பன் நகர். இப்பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், எதிர்வரும் கல்வியாண்டு முதல் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக புதிதாக சமையல் கூடம் கட்டுவதற்கு 8 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கான்ட்ராக்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் முனியாண்டி எடுத்திருக்கிறார். சமையல் கூடம் கட்டுவதற்கு முதல்கட்டமாக கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில், மேற்கண்ட சமையல்கூட கட்டுமான பணி நடைபெறும் இடம் அருகே, அப்பகுதி இளைஞர்கள் கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது, மேற்கண்ட கான்கிரீட் தூண்களின் மீது கைப்பந்து படவே, தூண்களின் மேலிருந்த சிமென்ட் துகள்கள் உதிர்ந்து கீழே விழுந்திருக்கிறது. இதையடுத்து, கான்கிரீட் தூண்களை இளைஞர்கள் ஒவ்வொன்றாக அசைத்து பார்த்தபோது, தூண்களில் போடப்பட்டிருந்த கான்கிரீட் துகள்கள் முழுவதும் கீழே கொட்டி இருக்கிறது.

இதையடுத்து, கான்கிரீட் தூண்கள் தரமில்லாமல் போடப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதை அப்பகுதி இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ வைரலாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த கான்ட்ராக்டர் கம் கவுன்சிலர் முனியாண்டி, மேற்கண்ட இளைஞர்கள் மீது கடலாடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, பொய் வழக்கு போட்டி மிரட்டியும் வருகிறாராம். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it