நாத்திக அரசின் கட்டுப்பாட்டில் கோயில்கள் இருந்தால் இதுதான் நிலைமை – இந்து முன்னணி !

நாத்திக அரசின் கட்டுப்பாட்டில் கோயில்கள் இருந்தால் இதுதான் நிலைமை – இந்து முன்னணி !

Share it if you like it

மூன்று ஆண்டுகளாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புது மண்டபம் திறக்கப்படாமலே உள்ளதாக இந்து முன்னணி திமுக அரசின் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

இந்து விரோத பாசிஸ திமுக அரசே சித்திரை திருவிழாவிற்கு முன்பாக புது மண்டபத்தை திறந்திடு..!

மதுரையில் உள்ளது,333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்ட புதுமண்டபம். 125 தூண்களையும், 28 வகையான சிற்பங்களையும் கொண்ட அற்புதமான மண்டபம். மூன்று ஆண்டு அல்ல, 30 ஆண்டுகள் ஆனாலும் செயல்படாத நாத்திக அரசின் கட்டுப்பாட்டில் கோயில்கள் இருந்தால் இதுதான் நிலைமை…

வருமானத்தை மட்டும் எடுக்கும் திமுக அரசு கோயிலை கவனிக்க தவறுவது இந்த மண்டபத்தின் மூலமாக வெட்ட வெளிச்சம் ஆகிறது.

வருகின்ற கள்ளழகர் திருவிழாவிற்கு முன்னதாக பாரம்பரியமான மண்டபத்தை பக்தர்களின் பார்வைக்கு திறந்து வைக்கவேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்துகிறது.


Share it if you like it