காட்டுத் தீக்கு முன்னால் நின்றுகொண்டு போஸ் கொடுத்த பாகிஸ்தானை சேர்ந்த ஹுமைரா அஸ்கருக்கு உலகம் முழுவதிலுமிருந்து குவியும் கண்டனங்கள்.
தீவிரவாதத்தை மிகைப்படுத்தி பேசுதல், விலங்குகளை கொடூரமாக கொல்வது, மக்களிடையே பிரிவினையை தூண்டுவது, ஆபாசமான காட்சிகளை வெளிப்படுத்துவது. பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது. கற்பழிப்பது போன்ற காட்சிகளை வெளிப்படுத்துவது. லவ் ஜிஹாத், ஆசிட் தாக்குதல்கள் மற்றும் பல குற்றச்செயல்களுக்கு சீன செயலி டிக்டாக் மிக முக்கிய காரணமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து இருந்தனர்.
டிக்டாக் செயலியை இந்தியாவில் முற்றிலும் தடை செய்யவில்லை என்றால் இளைஞர்கள், குழந்தைகள் வரும் காலத்தில் தவறான வழியில் சென்று சீரழிவார்கள் என்று பொதுமக்கள் உட்பட பலர் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதுதவிர, டிக்டாக்கில் தனது வீடியோவிற்கு அதிக லைக்குகள் கிடைக்கவில்லை என்றால், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் தொடர்கதையாக இருந்தது. இதையடுத்து, பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு, சமூக சீர்கேட்டை உருவாக்கும் டிக் டாக்கை இந்தியாவில் முற்றிலும் தடை செய்தது. இதையடுத்து, பாரதப் பிரதமர் மோடிக்கு இந்தியா முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தன.
இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த டிக் டாக் பிரபலம் ஹுமைரா அஸ்கர் என்பவர் மிகவும் ஆபத்தான முறையில் காட்டுத் தீயின் முன்பு நின்று கொண்டு டிக் டாக் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்காணொளி, தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது. போஸ் கொடுப்பதற்கு பதில் அவர் தீயை அணைக்க முயன்று இருக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.