திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களுக்கு சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
தமிழகத்திலுள்ள ஹிந்துக் கோயில்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. ஆனால், இக்கோயிலின் மூலம் கிடைக்கும் வருவாய் கோயில் பராமரிப்புக்குச் செலவிடப்படுவதில்லை என்றும், அதிகாரிகள் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட செலவுகளுக்கும், அரசின் இதர திட்டங்களுக்கான செலவுகளுக்கும் பயன்படுத்தப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆகவே, இந்து கோயில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, ஹிந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், ஆந்திராவில் இருக்கும் திருப்பதி கோயில் எந்தளவுக்கு சுத்தமும், சுகாதாரமாகவும் இருக்கிறதோ, அந்தளவுக்கு சுகாதாரச் சீர்கேடான நிலையில் தமிழகத்திலுள்ள கோயில்கள் இருந்து வருகின்றன. இதை மெய்ப்பிக்கும் வகையில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதாவது, முருகனின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடாக கருதப்படுவது திருச்செந்தூர். முருகன் கோயிலிலேயே இதுதான் கடற்கரையோரம் அமைந்திருக்கிறது. இதனால், இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. மேலும், ஆண்டுதோறும் இங்கு நடக்கும் சூரசம்ஹார விழா, மிகவும் புகழ்வாய்ந்தது.
இவ்வளவு புகழ்பெற்ற கோயில் சுகாதாரச் சீர்கேடான நிலையில் இருந்து வருகிறது என்பதுதான் வேதனையிலும் வேதனை. குறிப்பாக, பக்தர்களுக்கு வழங்கப்படும் குடிநீர், மிகவும் சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது என்பது கொடுமை. முருகன் கோயிலிலேயே அதிக வருவாய் ஈட்டித்தரும் கோயில்களில் முக்கியமான கோயிலாக திருச்செந்தூர் விளங்குகிறது. ஆனால், வருவாய்க்கேற்ப இக்கோயில் பராமரிக்கப்படுகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த சூழலில், திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்ற பக்தர் ஒருவர், கோயிலில் பக்தர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பைப் எவ்வளவு அசுத்தமாக இருக்கிறது என்பது வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பக்தர்கள் மத்தியில் கடும் அதிருத்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.