வளரும் தலைமுறையினர் மத்தியில் சனாதன தர்ம பிரச்சாரம் – திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு

வளரும் தலைமுறையினர் மத்தியில் சனாதன தர்ம பிரச்சாரம் – திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு

Share it if you like it

திருப்பதி போய் வந்தால் திருப்பம் வரும் என்று சொல்வார்கள். அந்த வகையில் திருமலை திருப்பதி பூமியில் மனோ காரகன் என்னும் சந்திரனின் முழு ஆதிக்கமும் நேர்மறை அதிர்வுகளும் ஒருசேர நிரம்பப் பெற்ற தலம் . வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்து இயற்கையான தண்ணீர் துறை இருக்கும் இடம் என்பதால் வாஸ்து படி குபேரன் நித்திய வாசம் செய்யும் இடமாகும். அந்த வகையில் திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வந்தால் அவர்களுக்கு மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். எதிர்மறை சிந்தனைகள் விலகி நேர்மறை சிந்தனைகள் நிறையும். வாழ்வின் பொருளாதார சார்ந்த சிக்கல்கள் தடைகள் இடர்பாடுகள் நீங்கி வளர்ச்சி பாதையில் முன்னேறுவார்கள். அதனால் தான் தீர்க்க முடியாத சிக்கல்கள் தாங்க முடியாத மன பாரதத்தில் இருப்பவர்களை ஒரு முறை குடும்பத்தோடு திருமலை திருப்பதி போய் ஒரு இரவு அங்கே தங்கி ஏழுமலையானை தரிசனம் செய்து வாருங்கள் என்ற அறிவுரையை நமது புராணங்கள் ஜோதிடங்கள் தொடங்கி நமது முன்னோர்கள் வரையில் சொல்லி வந்தார்கள்.

கல்வி – வேலை வாய்ப்பு – நவீன வாழ்க்கை என்று எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் ? கூட நம் மக்களின் ஆழ்மனதில் இன்னமும் அந்த ஆன்மீக நம்பிக்கைகளும் அதன் மீதான அசைக்க முடியாத உறுதிப்பாடும் இருப்பதன் வெளிப்பாடு தான் இஸ்ரோ விஞ்ஞானிகள் முதல் கடைக்கோடி ஏழை விவசாயி வரை ஒட்டுமொத்த சனாதன மக்களும் திருமலை திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானத்தில் குவிந்து வருவதன் கட்டியம். அந்த வகையில் காசி துலங்க தேசம் துலங்கும் என்பது எவ்விதமோ ? அவ்விதமே திருமலை முன்மொழியும் எதுவும் உலகை வெல்லும் என்னும் முன்னோர் வாக்கு . அதனால் தான் நம் தேசத்தின் முக்கிய தலைவர்கள் கடந்த காலங்களில் உயர்ந்த ஆட்சி பீடத்தில் அதிகாரம் செலுத்துபவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை சிறப்பு பூஜைகள் வழிபாடு செய்வது வழக்கமாக இருந்தது. அன்னிய படையெடுப்புகளுக்கு முன்பு வரை இவ்வழக்கம் எதார்த்த நடைமுறையில் இருந்த ஒன்று.

சுதந்திர பாரதத்தில் ஆட்சியாளர்கள் இந்த மண்ணின் ஆன்மீகத்தை புறக்கணித்த காரணம் திருமலை திருப்பதி அதன் முக்கியத்துவத்தை இழக்கலானது. ஆனாலும் தனிப்பட்ட முறையில் ஆழ்ந்த ஆன்மீக அறிவியல் ஈடுபாடு கொண்டவர்கள் இன்றளவும் தனிப்பட்ட விருப்பத்தின் பெயரில் முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் அல்லது முக்கிய பொறுப்புக்களை இருப்பவர்கள் திருமலை திருப்பதி வந்து ஏழுமலையான் தரிசனம் செய்வதை வழக்கமாகத்தான் வைத்திருக்கிறார்கள்.

வெளிநாட்டு தலைவர்கள் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் முதல் இலங்கையில் இந்து அடையாளங்களை அழித்தொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிய கடந்த கால அதிபர் வரையிலும் தங்களின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் அபயம் தேடி வந்து நிற்கும் ஒரு பொதுவான இடம் என்றால் அது திருமலை திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் மட்டுமே. அந்த வகையில் அண்டி சரணடைந்தவர்களுக்கு அபயம் கொடுத்து வழி நடத்தும் காவல் கொடியேந்தும் நாராயணனின் முழு அன்பும் அரவணைப்பும் பரிபூரணமாக கிட்டும் விஷ்ணுவின் சாநித்ய பூமி தான் திருமலை திருப்பதி புண்ணிய பூமி.

திருமலை திருப்பதி ஏழுமலையான் அனுக்கிரகத்தோடும் அங்கேயே தங்கி தவமிருந்து உலக நலனும் பிரபஞ்சத்தின் வளமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சதா சர்வ காலம் நாராயண நாமம் உச்சரித்து வாழும் சாதுக்களின் ஆசியோடும் முன்னெடுக்கும் எந்த ஒரு நிகழ்வும் உலகின் பொது நலனுக்கும் பிரபஞ்சத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் முழுமையான பங்களிப்பையும் வெற்றியும் தரவல்லது. அதனால் தான் ஏர் பிடிக்கும் விவசாயி முதல் விண்வெளியை வெற்றி கொள்ளும் விஞ்ஞானிகள் வரையில் தங்களின் முழு கடமையை அர்ப்பணிப்போடு செய்துவிட்டு வெற்றி வேண்டி ஏழுமலையான் பாதங்களில் சரண் அடைகிறார்கள்.

சனாதனம் பிறந்து வளர்ந்த பாரதத்தின் பூமியில் அந்த சனாதனத்தின் வழியில் வாழ்பவர்கள் ஆட்சியாளர்களாக இருக்கும் காலகட்டத்தில் இது போன்ற ஒரு முன்மொழிவுகள் வருவது ஆச்சரியம் இல்லை தான். அதே நேரத்தில் தர்மம் பிறந்த இதே பூமியிலேயே அந்த சனாதனத்தை எதிர்க்கிறோம் அழிப்போம் ஒழிப்போம் என்று சில்லறை தனம் செய்யும் சில அறிவிலிகளின் விஷம பிரச்சாரங்களுக்கு பதிலடி தரவும் தர்மத்தின் எதிரான அதர்ம பிரச்சாரங்களுக்கும் அவர்களின் மூளைச்சலவையில் பாதிக்கப்படும் வளரும் தலைமுறையை பாதுகாக்கவும் இந்த சனாதன விழிப்புணர்வு தர்ம பிரச்சாரம் காலத்தின் கட்டாயமாகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் சன்னிதியில் நிர்வாகம் வளர்ச்சி பாதுகாப்பு அதன் வருவாய் கொண்டு முடிந்த வரையில் ஆலயங்களை கட்டமைத்து பராமரிப்பது என்ற வட்டத்திலிருந்து தேச முழுவதும் சனாதன தர்மத்தின் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தர்ம பிரச்சாரமாக முன்னெடுக்க வேண்டும் என்ற அடுத்த இலக்கை நோக்கி நகர்வது பாராட்ட வேண்டிய விஷயம்.

திருமலை திருப்பதி பிரசித்தி பெற்ற பிரம்மோற்சவ விழாவிலேயே முக்கிய நிகழ்வுகளும் முடிவுகளும் ஏழுமலையானின் முழு ஆசி வேண்டி முன்மொழியப்படும். அங்கு சம்பிரதாய அளவில் முன்னெடுக்கப்படும் ஒரு நிகழ்வு பிறகு அதிகாரப்பூர்வமாக பரவலாக கொண்டு சேர்க்கப்படும். அந்த பாரம்பரிய அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தின் முடிவு சனாதன தர்மம் பற்றிய முழுமையான தர்ம பிரச்சாரத்தை வளரும் தலைமுறையினர் அறியும் வகையில் சாமானிய மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலான விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஆன்மீகத் தொண்டாக முன்னெடுக்க வேண்டும் அதை திருமலை திருப்பதியில் இருந்தே தொடங்க வேண்டும் என்ற முடிவு செய்திருப்பது அந்த ஏழுமலையானின் அனுகிரகம் அன்றி சாத்தியம் இல்லை.

திருமலை திருப்பதி யில் தொடங்கும் இந்த சனாதன பிரச்சாரம் தென்னகத்தில் வளரும் தலைமுறையினர் மத்தியில் பக்தி ஒழுக்கம் தர்ம சிந்தனை சனாதன தர்மத்தின் உன்னதம் உணர்த்தி தேசிய தெய்வீக பாதையில் வழி நடத்திப் போகும். இதன் மூலம் நேர்மறை சிந்தனைகள் சமூகப் பொறுப்பு தேசிய அர்ப்பணிப்பு கொண்ட ஒரு வளரும் தலைமுறை உருவாகி அவர்களின் மூலமாக தேசம் முழுவதும் எதிர்காலத்தில் இது போன்ற ஒரு வலுவான தலை முறைகளை நம்மால் வளர்த்தெடுக்க முடியும்.

உலகின் பெரும் மனித வளத்தை தன்னுள் கொண்ட பாரதம் அதிலும் வளரும் தலைமுறை அதிகம் கொண்டுள்ள பாரதம் இது போன்ற தர்ம சிந்தனையும் அறவழியில் தேசிய சார்புடன் பயணிக்கும் ஒரு சந்ததியை வளர்த்தெடுக்கும் போது அந்த சந்ததிகளின் மூலம் தேசமும் வலுப்பெறும். தெய்வீகமும் நிலைபெறும். அதன் மூலம் சர்வதேச அளவிலும் சனாதன தர்மம் வழியில் அன்பு சமாதானம் சகிப்புத்தன்மை நல்லெண்ணம் சகோதரத்துவம் யாவும் கொண்டு சேர்க்கப்படும். உலகம் யாவும் ஒன்று. உயிர்கள் யாவும் ஒரு தாய் மக்கள். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கப் பெறட்டும் என்ற சனாதனத்தின் வழியில் உலகில் சாந்தியும் சமாதானமும் சாஸ்வதமாக நிலைபெறும். திருமலை திருப்பதியில் தொடங்கி இருக்கும் இந்த நம்பிக்கை ஒளி ஏழுமலையான் அருளோடும் நல்லோர்களின் முயற்சி உழைப்பாலும் உலகம் முழுவதிலும் போய் சேர நாராயணன் பரிபூரணமாக அனுகிரகம் செய்யட்டும்.


Share it if you like it