குரூப் 2 தேர்வில் குளறுபடி: தி.மு.க. அரசின் அலட்சியம்!

குரூப் 2 தேர்வில் குளறுபடி: தி.மு.க. அரசின் அலட்சியம்!

Share it if you like it

தி.மு.க. அரசின் அலட்சியத்தால் குரூப் 2 முதன்மைத் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகள் அரங்கேறி இருக்கிறது. இதனால் இத்தேர்வை ரத்து செய்துவிட்டு வேறொரு நாளில் தேர்வை நடத்த வேண்டும் என்று தேர்வர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

தமிழகத்தில் காலியாக இருக்கும் அரசு பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம், தேர்வு நடத்தப்பட்டு, ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு நிலையிலான பணிக்கும் ஒவ்வொரு மாதிரியான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் 5,446 இடங்களை நிரப்புவதற்கு, கடந்த மே மாதம் 21-ம் தேதி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள்  நடந்தன. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 57,641 பேருக்கான முதன்மை தேர்வு நேற்று நடந்தது. தமிழகம் முழுவதும் 20 இடங்களில் 186 மையங்களில் இத்தேர்வு நடந்தது. இதில்தான் ஏகப்பட்ட குளறுபடிகள் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, சென்னை, மதுரை, தஞ்சாவூர், கடலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தேர்வர்களின் பதிவு எண்கள் மாறி இருந்தது. இதனால் குறித்த நேரத்தில் தேர்வை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும், எவ்வளவு நேரம் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறதோ, அவ்வளவு நேரம் கூடுதலாக வழங்க டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. ஆனால், பதிவெண் மாறி இருந்ததால், மாணவர்கள் அறையை விட்டு வெளியே வந்தனர். அப்போது, தங்களது நண்பர்களுக்கு போன் செய்து கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொண்டனர். மேலும், புத்தகங்களை பார்த்தும் விடைகளை தெரிந்து கொண்டனர். இதனால், வினாத்தாள் அவுட்டானது.

சென்னை துரைப்பாக்கத்திலுள்ள கல்லூரியில் இச்சம்பவம் அரங்கேறிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல, மதுரையிலும் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியது. தவிர, பதிவு எண் மாறியிருந்ததை கவனிக்காமல், பலரும் விடைகளை எழுதிவிட்டனர். இதனால், குறிப்பிட்ட பதிவெண் கொண்ட நபர் அந்த விடைகளை அடித்து விட்டு எழுத இடம் இல்லாததோடு, அடித்து விட்டு எழுதினால் மதிப்பெண் குறையும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருந்ததால் கலக்கமடைந்தனர். இதுபோன்ற வினா மற்றும் விடைத்தாள் மாறிய குளறுபடியால் இத்தேர்வை ரத்துசெய்து விட்டு வேறொரு நாளில் தேர்வை எழுத வேண்டும் என்று தேர்வர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.


Share it if you like it