மணிரத்தினம் வீட்டில் குண்டு வைக்கச் சொன்னது ஜெய்னுலாபிதீன்: உண்மையை உடைக்கும் ரகமதுல்லா!

மணிரத்தினம் வீட்டில் குண்டு வைக்கச் சொன்னது ஜெய்னுலாபிதீன்: உண்மையை உடைக்கும் ரகமதுல்லா!

Share it if you like it

தவ்ஹீத் ஜமாஅத் தலைவராக இருந்த ஜெய்னுலாபிதீன் பற்றிய உண்மைகளை, அதே அமைப்பைச் சேர்ந்த கோவை ரகமதுல்லா புட்டுப்புட்டு வைக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் நிறுவனத் தலைவராக இருந்தவர் பி.ஜெ. என்று அழைக்கப்படும் பி.ஜெய்னுலாபிதீன். இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததோடு, அது தொடர்பான ஆடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தவ்ஹீத் ஜமா அத் தலைவர் மட்டுமன்றி, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஜெய்னுலாபிதீன் நீக்கப்பட்டார். இந்த சூழலில்தான், ஜெய்னுலாபிதீன் பாலியல் குற்றவாளி மட்டுமல்ல, குண்டுவைப்பு குற்றவாளியும்கூட என்று தவ்ஹீத் ஜமா அத் பேச்சாளர் கோவை ரகமதுல்லா குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ பதிவில் இடம்பெற்றிருக்கும் சாராம்சம் இதுதான்…

1995-ம் ஆண்டு பம்பாய் திரைப்படம் வெளியானபோது, அப்படத்தின் இயக்குனர் மணிரத்தினம் அலுவலகம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. அங்கு குண்டு வைக்க ஆள் அனுப்பியது ஜெய்னுலாபிதீன். அதேபோல, 1994-ம் ஆண்டு அக்டோபர் மாதம், ஹிந்து முன்னணி தலைவர் ராஜகோபாலனை கொலை செய்வதற்கு ஆட்களை அனுப்பயது ஜெய்னுலாபிதீன். அதேபோல, 1995-ம் ஆண்டு நாகூர் ஹிந்து முன்னணி பிரமுகர் முத்துக்கிருஷ்ணனை கொலை செய்வதற்காக, நாகூரில் தேடப்படும் குற்றவாளியான ஒரு நபரிடம், பகவத்கீதைக்குள் வெடிகுண்டை செட் பண்ணி முத்துக்கிருஷ்ணனிடம் கொடுக்கும்படி கூறியிருக்கிறான். அவனும், அவ்வாறே செய்து, அந்த பார்சலை முத்துக்கிருஷ்ணனிடம் கொடுத்திருக்கிறான். ஆனால், அந்த பார்சலை அவர் பிரிக்கவில்லை. மாறாக, அவரது மனைவி தங்கம் பிரித்ததால், அவர் வெடிகுண்டு வெடித்து இறந்து விட்டார்.

இதுமட்டுமா, காரைக்காலில் இமாம் அலியை வைத்து, இளைஞர்களை அழைத்து ரகசியக் கூட்டம் போட்டு, இந்தெந்த இடங்களில் குண்டு வைக்கும்படி கூறியிருக்கிறான். மேலும், குண்டு வைக்கும்போது யாராவது பிடிபட்டால், என்னை யாரும் காட்டிக் கொடுத்து விடக் கூடாது. பழனி பாபா அனுப்பி வைத்ததாகக் கூற வேண்டும் என்று கூறியிருக்கிறான். அதேபோல, ஆலிம் ஜார்ஜ் என்பவர் இஸ்லாமியராக இருந்து கிறிஸ்தவராக மாறியவர். இதற்காக ஆலிம் ஜார்ஜை கொலை செய்ய ஆட்களை அனுப்பியவன் ஜெய்னுலாபிதீன். இந்த தாக்குதலில் ஆலிம் ஜார்ஜ் தப்பித்துவிட அவரது மனைவியை குத்திக் கொலை செய்து விட்டார்கள். கே.கே.நகர் இமாம் கமரு ஜமான், பில்லி சூனியம் செய்வதாகவும், பெண்களை சீரழிப்பதாகவும் கூறி, ஆட்களை அனுப்பி அவரை கொலை செய்ய வைத்தது ஜெய்னுலாபிதீன்” என்று கூறியிருக்கிறார்.

இந்த வீடியோ எப்போது வெளியிடப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் ஜெய்னுலாபிதீன் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கக் கோரி பின்னூட்டமிட்டு வருகின்றனர்.


Share it if you like it