பீகாரில் ரயில் தடம் புரண்டு விபத்து !

பீகாரில் ரயில் தடம் புரண்டு விபத்து !

Share it if you like it

தில்லி-காமக்யா நார்த்ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியானது நேற்று இரவு பீகாரின் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபொழுது சுமார் 9.35 மணியளவில் தடம் புரண்டதில் நான்கு பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்தனர். மீட்பு ரயில் நள்ளிரவு 1.30 மணியளவில் விபத்து அடைந்த இடத்தை அடைந்தது. சிக்கிய பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாகவும், தடம் புரண்ட பெட்டிகள் மீண்டும் பாதையில் கொண்டு வரப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் 92 ரயில்கள் திருப்பி விடப்பட்டன மற்றும் எட்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. விபத்து நடந்த இடத்தில் தூண்கள், மின் கம்பங்கள் மற்றும் சிக்னல் போஸ்ட்கள் சேதமடைந்தன.

மோசமான பாதை பராமரிப்பு அல்லது தண்டவாளத்தை மாற்றியதில் ஏற்பட்ட தவறு காரணமாக தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்வண்டி தடம் புரண்டது தொடர்பான தொழில்நுட்ப அம்சங்களை நிபுணர் குழு ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளதாக கிழக்கு மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி பிரேந்திர குமார் தெரிவித்தார். மூன்று பெட்டிகள் அதிகபட்ச சேதத்தை சந்தித்ததாகவும், இந்த பெட்டிகளில் இருந்து இறப்புகள் பதிவாகியதாகவும் அவர் கூறினார். “இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை ரயில்வே வழங்கியுள்ளது. காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படுகிறது, என்று கூறியுள்ளார்.


Share it if you like it